பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

von neumann bottleneck

1553

VRML


செயலாக்கம் இக்கட்டுமானத்தின் சிறப்புக்கூறு. வரிசைமுறை நிரல்களினால் ஏற்படும் குறைபாடுகளைப் போக்க பிற்காலத்தில் இணைநிலை கட்டுமானங்கள் உருவாயின.

von neumann bottleneck : வான் நியூமன் முட்டுக்கட்டை : வான் நியூமன் எந்திரத்தின் வேகத்தடைக்கான காரணங்களைக் குறிப்பிடு கிறது. அவை : 1. ஒரே வழித்தடத்தில் உள்ள மின் சுற்றுகள் அடிப்படை சேமிப்பகத்திலிருந்து கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு நிரல்களை எடுத்துச் செல்கின்றன. 2. ஒரே தரவு பாதையில் அடிப்படை சேமிப்பகத்திற்கும், கணித தருக்கப் பிரிவுக்கும் மின்சுற்றுகள் செயல்படுகின்றன.

Von Neumann, John (1903-1957) : வான் நியூமன், ஜான் (19031957) : இந்நூற்றாண்டின் தலை சிறந்த கணிதமேதைகளில் ஒருவர். முதலாவது மின்னணுக் கணினிகளில் ஒன்றை உரு வாக்கியவர். இவர் சேமிப்புச் செயல்முறைக் கோட்பாட்டையும், விளையாட்டுக் கோட்பாட்டையும் உருவாக்கினார்.

von neumann machine : வான் நியூமன் எந்திரம் : வான் நியூமன் 1945இல் ஓர் அறிக்கை யில் இந்த எந்திரம் பற்றி விவரித்துள்ளார். இது, ஒரு மின்னணுக் கணிப்புச் சாதனத்தின் தருக்கமுறை வடிவமைப்பாகும். சேமிப்புச் செயல் முறைக் கோட்பாடு இந்த எந்திரன் சிறப்புக் கூறாகும்.

VPD : விபீடி : மெய்நிகர் அச்சுப்பொறிச் சாதன இயக்கி என்று பொருள்படும் Virtual Printer Device Driver என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

VPS : விபீஎஸ் : 'Vector Per Second' என்பதன் குறும்பெயர். நெறியம் (Vector) அல்லது வரிசை செயலகத்தின் வேகத்தை அளக்கப் பயன் படுத்தப்படுவது.

VRC : விஆர்சி : 'செங்குத்து மிகைச் சரிபார்ப்பு' என்று பொருள்படும் "Vertical Redundancy என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

VRML : வீஆர்எம்எல் : மெய்நிகர் நடப்பு மாதிரிய மொழி என்று பொருள்படும் Virtual Reality Modelling Language என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சில ஒளிக்காட்சி விளையாட்டுகளில் இருப்பதுபோன்ற முப்பரிமாண ஊடாடு வலை வரைகலைக்கான காட்சி


98