பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

X copy

1586

XFCN


பொருள் நிறுமங்களின் கூட்டமைப்பு. யூனிக்ஸின் வரைகலை பணிச்சூழலான எக்ஸ் -விண்டோஸின் தர வரையறைகளை நிர்வகிக்கும் அமைப்பு. இப்போது ஓப்பன் குரூப்பின் எக்ஸ் பணித் திட்டக்குழு எக்ஸ் விண்டோஸ் அமைப்பின் பொறுப்புகளை வகிக்கிறது.

x copy : எக்ஸ் காப்பி : கோப்புகளையும், துணைவிவரத் தொகுப்புகளையும் நகலெடுக்கின்ற டாஸ் மற்றும் ஒஎஸ்/2 பயன்பாடு.

X-datum line : எக்ஸ் விவர-வரி : துளையிட்ட அட்டையில் மேல்மூலையின் ஓரத்தில் உள்ளதாகப் பயன்படும் ஒரு கற்பனைக்கோடு. சான்றாக, ஹொலரித்தின் 12 துளை வரிசை ஓரத்தின் அருகே உள்ளகோடு.

XENix : ஜெனிக்ஸ் : இது, யூனிக்ஸ் என்ற செயற்பாட்டுப் பொறியமைவின் ஒரு திருத்திய பதிப்பு. இதனை நுண்கணினிகளில் பயன்படுத்துவதற்கு மைக்ரோசாஃப்ட் கழகம் தயாரித்துள்ளது.

xerographic printer : மின்துகள் ஒளிப்பட அச்சுப்பொறி : காகிதத்தில் ஓர் ஒளியியல் உருக்காட்சியை அச்சடிப்பதற்கான சாதனம். இதில், காகிதத்தில் மின்நிலைப்பாட்டு முறைப்படி மின்னேற்றம் செய்யப்பட்டுள்ள பகுதிகளை ஒளி மற்றும் இருள் பகுதிகள் குறிக்கின்றன. காகிதத்தில் ஒரு பொடித்த மைத்துகளைப் பூசும்பொழுது மின்னேறிய பகுதிகளில் அந்தப் பொடி ஒட்டிக்கொள்கிறது. ஒட்டிய பொடியை வெப்ப மூட்டுதல் மூலம் காகிதத்தில் உருகச் செய்யப்படுகிறது.

Xerox PARC : ஜெராக்ஸ் பார்க் : ஜெராக்ஸ் பாலோ ஆல்ட்டா ஆய்வு மையம் (Xerox Palo Alto Research Center) என்பதன் சுருக்கம். கலிஃபோர்னியாவின் பாலோ ஆல்ட்டோவிலுள்ள ஆய்வு மற்றும் உருவாக்க மையத்தைக் குறிக்கிறது. குறும்பரப்புப் பிணையம் (LAN), லேசர் அச்சுப்பொறி, வரைகலைப் பயனாளர் இடைமுகம் (GUI) போன்ற நவீனக் கண்டுபிடிப்புகளின் பிறப்பிடம் ஜெராக்ஸ் பார்க்தான்.

XFCN : எக்ஸ்எஃப்சிஎன் : புறச் செயல்கூறு (External Function) என்பதன் சுருக்கம். முதன்மையான நிரலுக்கு வெளியே நிலவு