பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XOR

1588

X-window system


குறியீட்டை அனுப்பும். அதனைப் பெற்றவுடன் அனுப்பும் கணினி தரவு அனுப்புவதை நிறுத்திக் கொள்ளும். இது போல எக்ஸ்நிகழ் சமிக்கை கிடைத்தவுடன் தரவுவை அனுப்பத் தொடங்கும்.

ΧΟR : எக்சோர் (விலக்கும் அல்லது) : '"Exclusive OR"என்ற ஆங்கிலப் பெயரின் தலைப்பெழுத்துச் சுருக்கம்.

xposition : எக்ஸ் நிலை;எக்ஸ்அச்சு ஆயத்தொலை.

X protocol : எக்ஸ் விண்டோ அமைப்பின் நெறிமுறை.

X-punch : எக்ஸ்-துளை : ஒரு ஹொலரித் அட்டையில் 11 ஆவது துளையிடும் நிலையில் துளையிடுதல். இதனை 11ஆம் துளை என்றும் கூறுவர்.

x-ray lithography : எக்ஸ்-கதிர் லித்தோகிராஃபி : ஒரு நுண் மீட்டருக்கும் குறைவான கோடுகளைப்போட ஒருங்கிணைந்த மின்சுற்றைச் செயல்படுத்தும் ஒரு நுட்பம்.

x-seriers : எக்ஸ் தொடர்.

'x terminal : எக்ஸ் முனையம் : ஓர் ஈதர்நெட் பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள அறிவுநுட்பமுள்ள ஒரு காட்சிச்சாதனம். எக்ஸ் விண்டோ அமைப்பில் கிளையன் பயன்பாடுகளிலிருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் செயல்பாடுகளை நிகழ்த்தும்.

X windows : எக்ஸ் விண்டோஸ் : டிஜிட்டலும் ஐபிஎம்மும் சேர்ந்து எம்ஐடியில் உருவாக்கிய வரைகலை பணிநிலையத்துக்கான சாளர அமைப்புச் சூழ்நிலை. கட்டமைப்பில் உள்ள ஒரு கணினி அமைப்பில் உருவாக்கப்பட்ட வரைகலையை வேறொரு பணிநிலையத்தில் காட்டுவதற்கு வரைகலைக்காக வடிவமைக்கப்பட்டது. எக்ஸ் விண்டோஸ் எல்லா செயலாக்க அமைப்பிலும் ஓடுமாறு அமைக்கப்பட்டு எல்லா பணிநிலைய விற்பனையாளர்களின் ஆதரவும் பெற்றது.

x-window system : எக்ஸ் விண்டோ சிஸ்டம் : எம்ஐடீயில் காட்சிப்படுத்தலைக் கையாள்வதற்கான தரப்படுத்தப்பட்ட நிரல்கூறுகளின் தொகுப்பு. எந்த ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாதது. யூனிக்ஸ் பணிநிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு