பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bitmapped display

158

BitNET


அளவு முறையில் உள்ள எழுத்துகளின் தொகுதி. ஒவ்வொரு எழுத்தும் தனித்தனி முறையிலான புள்ளிகளை உடையது. துண்மி மூலம் உருவான திரை அல்லது அச்சுப்பொறியின் அச்செழுத்துகள் புள்ளிக் கணக்குகளாலான எழுத்துகளைக் கொண்டிருக்கும்.

bitmapped display : துண்மிப் படக்காட்சி : திரையில் உள்ள ஒவ்வொரு படப்புள்ளியும் ரேமில் உள்ள ஒரு நினைவகப் பகுதியுடன் தொடர்பு படுத்தும் காட்சித்திரை.

bit-mapped graphics : துண்மிப் பட வரைகலை : திரையில் உள்ள படப்புள்ளிகளுக்கும் நினைவகத்தில் உள்ள துண்மிகளுக்கும் இடையே ஒன்றுக்கொன்றான தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் திரையில் உருவங்களை உண்டாக்கும் முறை. வண்ண வரைகலைகளில், சிவப்பு, பச்சை மற்றும் நீலநிற படப்புள்ளிகளை துண்மிப்பட முறையில் உருவாக்க மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட துண்மிகள் தேவைப்படும். சில வருடி பொறிகளிலும் ஒவிய மென்பொருள்களிலும் துண்மி வரைகலைகள் உருவாக்கப்படுகின்றன.

bitmapped screen : துண்மி படத்திரை : கணினியின் ரேமில் ஒவ்வொரு நினைவக இடத்திற்கும் தொடர்புள்ள புள்ளிகளைக் கொண்ட காட்சித்திரை. ஒவ்வொரு புள்ளியுடன் தொடர்புள்ள நினைவக இருப்பிடத்தை ஒட்டி புள்ளிகளை இயக்கவோ, நிறுத்தவோ செய்ய முடியும்.

bitmapping : துண்மிப் படமாக்கம் : துண்மிகளின் புள்ளிகள் குழுக்களைப் பயன்படுத்தி அகர வரிசை எழுத்து அல்லது வரைகலை உருவத்தை உருவாக்குதல்.

bitmap scanning : துண்மிப் நிலைப்பட வருடல்.

bit mask : துண்மி மறைப்பு : ஒரு பதிவகம் மற்றும் மாறியின் உள்ளடக்கத்தைச் சோதனை செய்யப் பயன்படுத்தப்படும் துண்மிகளின் தொகுதி.

bit matrix : துண்மி அணி : இரு பரிமாண அணி. இதன் உறுப்புகளாக இரும இலக்கங்களாகிய 0 அல்லது 1 மட்டும் வரும்.

BitNET : பிட்நெட் : ஏனெனில் அது நேரப் பிணையம் என்ற பொருள்தரும் Because It's Time Network என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1981ஆம் ஆண்டில் வாஷிங்டன் நகரில் அமைக்கப்பட்ட விரிபரப்புப் பிணையம் (WAN). ஆராய்ச்சி மற்றும் கல்விப் பிணையக் கழகம் (CREN -