பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bit depth

157

bitmap font


bit depth : துண்மி ஆழம் : ஒரு வரைகலைக் கோப்பில் நிறத் தகவலைப் பதிவு செய்ய ஒரு படப்புள்ளிக்கு ஒதுக்கப்படும் துண்மிகளின் எண்ணிக்கை.

bit error rate : துண்மி பிழை வீதம்.

bit error single : துண்மி தனிப்பிழை.

bit field : துண்மி புலம் : ஒரு எட்டியலையோ சொல்லையோ துண்மிகளாகப் பார்க்கும்போது, பல துணுக்குகள் ஒன்றுசேர்ந்து ஒரு தகவலின் பகுதியைத் தருகிறது. சான்றாக, 0 - 3துண்மிகள் ஒரு துண்மி புலத்தில் உள்ள எழுத்துகளின் முன்னணி நிறத்தைக் குறிப்பிடுகின்றன.

bit flipping : துண்மி மாற்றுதல் : 0-ஐ 1 ஆகவும் 1-ஐ 0 ஆகவும் மாற்றும் செயல். சான்றாக, வரைகலை நிரலில் கறுப்புவெள்ளை துண்மி வரைந்த உருவத்தை மாற்ற அதன் துண்மிகளை மாற்றிப் பெறலாம்.

bit image : துண்மிப் படிமம் : ஒரு கணினியின் நினைவகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள துண்மிகளின் கூட்டம். ஒரு செவ்வக அணிபோல வரிசைப்படுத்தப்பட்டது. கணினியின் காட்சித் திரை பயனாளருக்குத் தெரிகின்ற ஒரு துண்மித் தோற்றம் எனலாம்.

bit length : துண்மி நீளம்.

bit level device : துண்மி நிலை சாதனம் : வட்டு இயக்ககம் போன்ற ஒரு சாதனம். இது தகவல் துண்மிகள் அல்லது தகவல் கட்டங்களை உள்ளீடு/வெளியீடு செய்யும் pulse Level Device க்கு எதிர்ச் சொல்.

bit tocation : துண்மி இருப்பிடம்.

bit manipulation : துண்மியைக் கையாளல் : துண்மிகளை மாற்றியமைத்து ஒரு தரவு மதிப்பிணை மாற்றுதல். துண்மிமாற்றுதல் என்றும் சில சமயம் சொல்லப் படுவதுண்டு.

bit map : துண்மி நிலைப்படம் : 1. கணினியில் வரைபடங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இருப்பிடப்பகுதி. தொடர்ந்து காட்சித்திரைக்கு படத்தை அனுப்பி வருவது. 2. துண்மிகளின் வரிசை நின்றோ இயங்கியோ செயல்படுவதை ஒட்டி பிற பொருள்களின் வரிசை மாற்றம் அடைதல்.

bitmap display : துண்மி நிலைப்படக் காட்சி.

bitmap font துண்மிப்பட எழுத்துரு : துண்மி முறையினைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் எழுத்துரு. பொதுவாக இதை அளவு மாற்றவோ சுழற்றவோ முடியாது. ஒரு குறிப்பிட்ட