பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

zilog

1597

zmodem


 zilog : சிலாக் : உலகின் முதல் கணினி செயலகச் சிப்பான இசட்- 80இன் உற்பத்தியாளர். இந்த சிப்புவால் அமைந்த கணினி சிபிஎம் செயலாக்க அமைப்பில் இயங்கியது. பின்னர் இதைவிட வேகமாகச் செயலாற்றும் இன்டெல் 8080 சிப்பு இதைப் பின்னுக்குத் தள்ளியது. அதற்கடுத்து ஐ.பி.எம் பீசியில் பயன்படுத்தப்பட்ட 8088 சிப்பு கணினித் துறையில் புரட்சியையே ஏற்படுத்தியது.

zip : சிப்: பீகேசிப்பைப் (PKZIP) பயன்படுத்தி ஒரு கோப்பை சுருக்குதல்.

zip drive : ஸிப் இயக்ககம் : அயோ மெகா நிறுவனம் உருவாக்கிய ஒரு வட்டு இயக்ககம். 3.5 அங்குல விட்டமுள்ள ஸிப் இயக்ககம் செருகுவட்டிலேயே (ஸிப் வட்டுகள்) 100 மெகா பைட் தரவை எழுத முடியும்.

Zip drv

zip files : சிப் கோப்புகள் : பிகே சிப்பைப் பயன்படுத்தி சுருக்கிய வடிவத்தில் உருவாக்கப்படும். ZIP விரிவாக்கம் உள்ள கோப்பு. இவற்றைப் பயன்படுத்த அவற்றை விரிக்க வேண்டும். PKUNZIP.EXE நிரல் தொடர் சுருக்கிய கோப்புகளை வழக்கமான அளவில் விரிக்கிறது. தரவு பாதுகாப்பதற்கு வசதியான, சிக்கனமான வழி இதுவே.

zip mode : சிப் முறை : வரைவியின் இயக்க முறை. இதில் ஒவ்வொரு உள்ளீட்டுக் கட்டளையும் கூட்டிய மாறுபாட்டைக் குறிப்பிடும்.

.zm : இஸட்எம் : ஒர் இணைய தள முகவரி ஜாம்பியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

zmodem : இசட்மோடம் : எக்ஸ் மோடம் கோப்பு பரிமாற்ற நெறி

முறையின் மேம்