பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

zoom out

1600

Zues, Konrad


காட்சியின் தோற்றத்தை மாற்றுதல்.ஒரு காட்சித்திரையில் காட்டப்படும் ஓர் உருவத்தை விரிவாக்குகிற அல்லது குறைக்கிற திறம்பாடு.

zoom out : சிறிதாக்கு : சேய்மையாக்கு : கணினி வரைகலை அல்லது பல் ஊடகப் பயன்பாடுகளில், ஒளிமுறை ஒளிப்படக் கருவியில் ஏற்படும் மாற்றம். இதில் கருவியானது அது படம் பிடிக்கும் பொருளில் இருந்து பின்னோக்கி வருவது போலத் தோன்றும். ஜூம் அவுட்' முறையில் அளவு சிறிதாகும்.

zoom pyramid : பிரமிடாக்கு : அதிகத் தெளிவான உருவமும், அதையடுத்து அதன் பாதியளவே தெளிவான உருவமும் கொண்ட தொடர்ச்சியான இலக்க உருவங்கள். உயர் தெளிவுக்குத் தேவைப்படும் இடத்தில் மூன்றில் ஒரு பங்கே தேவைப்படும். எந்த வகையான தெளிவான உருவமும் விருப்பம்போல் பெறலாம். நேரடியாகவோ அல்லது ஒன்றில் ஒன்றை நுழைத்தோ பெறலாம்.

Z-parameter இசட்-அளவு கோல் : நான்கு டிரான்சிஸ்டர்களின் தொகுதிக்குச் சமமான மின்சுற்று அளவு கோல்களில் ஒன்று. ஒய் அளவு கோலின் தலைகீழ் அமைப்பு.

. zr : . இசட்ஆர் : ஓர் இணைய தள முகவரி ஸய்ர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

zulu time : ஸூலு நேரம் : கிரீன்விச் சராசரி நேரம் என்பதைக் குறிக்கும் கொச்சை வழக்கு.

Zuse, Konrad : ஜூஸ், கோன்ராடு : கணினிச் சாதனங்களை உருவாக்குவதில் முன்னோடியாக விளங்கிய ஜெர்மன் அறிஞர். இவர், 1941இல், வியக்கத்தக்க முன்னேறிய அம்சங்கள் கொண்ட ஜூஸ் இசட்-3 என்ற எந்திரத்தை உருவாக்கினார். இதன் வேகம் மார்க் 1 கம்ப்யூட்டரின் வேகத்துக்கு இணையானது.