பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bit stream

161

biz. newsgroups


அழைக்கப்படும் இது பாட் விகித அளவுடனும் மாற்றிப் பயன் படுத்தப்படுகிறது. ஆனால், இந்த இரண்டின் அனுப்புதல் விகிதம் சமமாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

bit stream : துண்மித்தாரை ; துண்மி வரிசை : எழுத்துத் தொகுதிகளாகப் பிரிக்காமல் தகவல் தொடர்புக் கம்பி வழியாக வரிசையாக அனுப்பப்படும் துண்மித் தொடர்.

bit stuffing : துண்மி நுழைத்தல் : ஒரு குறிப்பிட்ட தோற்றத்தை முழுமைப்படுத்த அனுப்பப்பட்ட செய்தியுடன் துண்மிகளைச் சேர்த்தல். கட்டுப் பாட்டுக் குறியீடுகளாகத் தவறாகக் கருதப்படுவதைத் தடுக்க தகவல் துண்மிகளின் அமைப்பைப் பிரித்தல்.

bit synchronous protocol : துண்மி ஒத்தியங்கு நெறி முறை.

bit test : துண்மி சோதனை : ஒரு குறிப்பிட்ட துண்மியின் அடையாளம் ஒன்றா அல்லது சுழியா (பூஜ்யம்), இயக்கமா அல்லது நிறுத்தமா என்று கண்டறிய உதவும் நிரல் சோதனை முறை.

bit transfer rate : துண்மி பரிமாற்ற வீதம் : 1. ஒரு குறிப்பிட்ட நேர அலகில் இடமாற்றம் செய்யப்பட்ட துண்மிகளின் எண்ணிக்கை. 2. ஒரு நொடிக்கு இத்தனை துண்மி என்றே பொதுவாகக் குறிப்பிடப்படும்.

bit twiddler : துண்மி ஆர்வலர் : 1. கணினி நேசர், 2. கணினியோடு பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைபவர்.

Bix : பிக்ஸ் : எண்மித் தகவல் பரிமாற்றம் என்று பொருள்படும் byte information exchange என்பதன் தலைப்பெழுத்துக் குறும் பெயர். பைட் (byte) இதழ் தொடங்கி வைத்த ஒர் இணையச் சேவை. இப்போது டெல்ஃபி இணையச் சேவைக் கழகம் (delphi internet services corporation) இதனை வாங்கிச் செயல் படுத்தி வருகிறது. மின்னஞ்சல், மென்பொருள் பதிவிறக்கம், மென்பொருள்/வன்பொருள் தொடர்புடைய கருத்தரங்குகள் போன்ற சேவைகளை பிக்ஸ் வழங்கி வருகிறது.

biz. newsgroups : வணிகச் செய்தி அரங்கம்; வணிகச் செய்திக் குழுக்கள் : இணையத்திலுள்ள செய்திக் குழுக்களில் ஒருவகை. வணிகம் பற்றிய விவாதங்களே இக்குழுக்களில் நடைபெறுகின்றன. ஏனைய செய்திக் குழுக்களில் இருப்பது போன்று அல்லாமல், இவற்றில் விளம்பரம் மற்றும் ஏனைய விற்பனை தொடர்பான தகவல்

11