பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

board computer

169

boilerplate document


பட்ட அச்சிடப்பட்ட மின்சுற்று அடுக்குகளைக் கொண்ட வெளிப்புற உறுப்பு. இதில் சிப்புகள் மற்றும் பிற மின்னணு உறுப்புகள் இணைக்கப்படுகின்றன.

board computer : அட்டைக் கணினி : ஒரு தனி மின் சுற்று அட்டையில் எல்லா மின்னணு பாகங்களும் அமைக்கப்பட்டுள்ள ஒரு கணினி.

board exchange warranty : அட்டை மாற்றக்கூடிய சான்றுறுதி : முதல் அட்டையில் பழுது ஏற்பட்டால் அதற்குப் பதிலாக புதிய ஒன்றை மாற்றித்தருவதற்கு வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும் உறுதி.

board level : அட்டை நிலை : மரப்பலகையில் அல்லாது அச்சிட்ட மின்சுற்று அட்டையில் ஏற்றப்படும் மின்சுற்றுச் சாதனங்கள்.

body : உடற்பகுதி : இணையத்தில் மின்னஞ்சல் மற்றும் செய்திக்குழுத் தகவல்களில் தலைப்பகுதி மற்றும் உடற்பகுதிகள் உண்டு. அனுப்புபவரின் பெயர், இடம், சென்று சேரும் முகவரி போன்றவை தலைப்பகுதியிலும், உள்ளடக்கத் தகவல் உடற்பகுதியிலும் இடம் பெறுகின்றன.

body face : உடற்பகுதி எழுத்து வடிவம் : ஓர் ஆவணத்தை உருவாக்கும்போது முகப்புத்தலைப்பு, ஆவணத் தலைப்பு, பத்தித் தலைப்புகள் பெரிய/ தடித்த எழுத்தில் அமைகின்றன. உடற்பகுதியில் அமையும் தகவல்கள் ஒரளவு சிறிய எழுத்திலேயே அமைய வேண்டும். உடற்பகுதிக்கு ஏற்ற வடிவத்தை உடற்பகுதி வடிவம் என்கிறோம். சேன் செரீஃப், டைம்ஸ் நியூ ரோமன் போன்ற எழுத்துருக்கள் (fonts) உடற்பகுதிக்கு ஏற்றவை.

body type : உடல்வகை மாதிரி.

body works : உடல் இயக்கம் : மனித உடல் அமைப்பை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட கல்வி மென்பொருள்.

BOF : பிஓஎஃப் : Beginning of File என்பதன் குறும்பெயர். முதன்முதலாகத் திறக்கும்போது உள்ள கோப்பின் நிலை. கோப்புகாட்டியை மீண்டும் அமைக்கும் ஆணை அல்லது கட்டளை.

boilerplate : கொதிகலன் தகடு; கொதி தட்டு : பல்வேறு ஆவணங்களில் சொல்லுக்குச்சொல் மீண்டும் பயன்படுத்தப்படுகின்ற பனுவலின் பகுதி.

boilerplate document : கொதிகலன் தகட்டு ஆவணம் : சில தரமான பத்திகளில் தகவலைக் கொண்டு தேர்ந்தெடுத்த பத்திகளை ஒன்றாக இணைத்து ஏற்படுத்தப்படும் ஆவணம்.