பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

boolean calculus

172

boot


boolean calculus : பூலியன் கணக்கீடு.

boolean complementation : பூலியன் நிரப்புகை.

boolean data : பூலியன் தரவு : ஆம்/ இல்லை அல்லது உண்மை / பொய் என்னும் மதிப்புகளை ஏற்கும் தரவு.

boolean equations : பூலியன் சமன்பாடுகள் : கணக்கோட்பாடு (set theory) கணக்கீடுகளில் பயன்படுத்தப்படும் கணங்களுக்கிடையேயான சமன்பாடுகள்.

boolean expression : பூலியன் தொடர்; பூலியன் கோவை : பூலியன் இயக்கிகளின் மூலம் உண்மை அல்லது பொய் என்ற இரண்டில் ஒன்றை குறிக்கும் தொடர்.

boolean logic : பூலியன் தருக்கம் : 19ஆம் நூற்றாண்டின் நடுவில் ஜார்ஜ் பூல் என்ற ஆங்கிலக் கணிதமேதை உருவாக்கிய தருக்கக் கணிதம். அதன் விதிகளும், இயக்கங்களும் எண்களுக்குப் பதிலாக தருக்கப் பணிகளை ஆற்றுகின்றன. AND, OR, NOT ஆகியவை பூலியன் இயக்கத்தின் அடிப்படைகள்.

boolean operation, binary : இரும பூலியன் செயற்பாடு.

boolean operator : பூலியன் இயக்கி : தருக்க இயக்கிக் கணக்கீடுகள் மற்றும் முடிவுகள் இரண்டு மதிப்புகளில் ஒன்றாகவே அமையும்.

boolean Search : பூலியன் தேடல் : குறிப்பிட்ட தரவுகளைத் தேடல், பூலியன் இயக்கிகளான AND, OR, NOT ஆகியவற்றைப் பயன்படுத்தி எந்த ஒரு நிலையையும் தேட முடியும்.

boolean variable : பூலியன் மாறிலி : உண்மை அல்லது பொய் என்ற இரண்டு மதிப்புகளை மட்டுமே ஏற்கும் மாறிலி.

Boole, george 1815 - 1864 : பூல், ஜார்ஜ் 1815-1864 : ஆங்கில தருக்கவியல் மற்றும் கணிதவியல் அறிஞர். 1847இல் தருக்கவியலை கணித முறையில் ஆய்வது என்று ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிட்டார். 1851இல் தருக்க அமைப்பைப் பற்றிய முதிர்ச்சிமிக்க சிந்தனை விதிகளின் ஆய்வு என்ற அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். இதில் தருக்கவியல் பற்றிய கணிதகொள்கைகள் உருவாக்கப்பட்டன.

bool type : தருக்க இனம்.

boot : ஏற்று; இயக்கு : Boot strap என்பதில் இருந்து எடுக்கப்பட்ட சொல். கணினியின் சேமிப்புச் சாதனத்தின் மூலம் நிரல்களைப் படித்து ஒரு கணினியின் நினைவகத்திற்கு அனுப்புவது