பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bootable

173

boot partition


அல்லது மீண்டும் கணினியைத் இயக்குவது. ஏற்கெனவே கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போது அதனை இயக்கும் முறையை முதன்மை நினைவகத்திற்கு அனுப்புவது.

bootable : இயக்க முறைமை ஏற்றிய : இயக்க முறைமைக் கோப்புகள் பதியப்பட்டு கணினியை இயக்கி வைக்கப் பயன்படுகின்ற நெகிழ்வட்டைக் குறிக்கும்.

bootable disk : இயக்குறு வட்டு : இயக்க முறைமையைக் கொண்டுள்ள வட்டு. பொதுவாக இது நெகிழ் வட்டின் இயக்கத்தில் ஏற்றக்கூடிய நெகிழ்வட்டு இல்லையென்றால், நிலைவட்டிலிருந்து எடுத்துத் துவக்கும் ஆணை ஏற்றப்படும்.

boot block : இயக்கத் தொடக்கப் பகுதி : இயக்க முறைமையை நினைவகத்தில் ஏற்றும் ஆணைகளையும், கணினியை இயக்கிவைக்கும் ஏனைய தகவல்களையும் பதித்து வைத்துள்ள வட்டுப் பகுதி.

boot/booting : இயக்கு/இயக்குதல் : கணினியைத் தொடக்கு என்பதைக் குறிப்பிடப் பயன் படுத்தப்படும் தனி மொழிச் சொல். நாம் கணினியின் பொத்தானை இயக்கியவுடன், ஏற்றும் பகுதியிலிருந்து ஆணை வந்து கணினி இயங்குகிறது. அந்த உற்பத்தியாளரே ரோமில் (ROM) சிறிய நிரலாக அமைத்திருப்பார்.

boot disk : இயக்கு வட்டு : கணினியை இயக்குவதற்குரிய இயக்கமுறைமை சேமிக்கப்பட்டுள்ள வட்டு. கணினியை இயக்கியதும், இந்த வட்டிலுள்ள இயக்க முறைமை நினைவகத்தில் ஏற்றப்பட்டு, கணினி பணியாற்ற தயாராகிவிடும். இயக்குவட்டு நெகிழ்வட்டாகவோ அல்லது நிலைவட்டின் ஒரு பகுதியாகவோ இருக்கலாம்.

boot drive : இயக்கு வட்டியக்ககம் : இயக்க முறைமை அமைந்துள்ள வட்டு இயக்ககம்.

boot failure : இயக்கத் தோல்வி : கணினியை இயக்க முற்படும் போது, இயக்க முறைமையை வட்டில் கண்டறிந்து நினைவகத்தில் ஏற்றிக் கணினி இயக்கத்தைத் தொடக்கி வைக்க முடியாமல் போகும்போது இத்தகைய தோல்வி நேருகிறது.

boot partition : இயக்க பாகப்பிரிவு : இயக்க முறைமைக் கோப்புகள் மற்றும் துணைக் கோப்புகள் எழுதப்பட்டுள்ள வட்டுப் பகுதி. கணினியை இயக்கும்போது அல்லது புத்துயிரூட்டும்போது இக்