பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

burst

192

burst speed


சீவார்ட் (1857-1898) : முதல் வணிக முறையிலான கூட்டல் எந்திரத்தைக் கண்டுபிடித்தவர். இன்றைய பரோஸ் கார்ப்பரேஷன் அந்த எந்திரத் திலிருந்துதான் துவங்கியது.

burst : வெடிப்பு : 1. கணினி செயல்பாடுகளில், தொடர்ச்சியான காகிதத்தில் இருந்து தனித்தாள்களைப் பிரித்தல். 2. தரவு அனுப்புதலில் ஒரே அலகாகக் கணக்கிடப்படும் சமிக்கைகளின் தொகுப்பு.

burster : வெடிப்பி : பல பக்கங்கள் உள்ள கணினி அச்சு வெளியீட்டினைப் பிரிக்கும் ஒரு எந்திர சாதனம். நகல்களைப் பிரித்து கார்பன் தாள்களை எடுக்கிறது.

burst errors : வெடித்த பிழைகள் : தகவல் தொடர்புகளில் மிக நெருக்கத்தில் (வெடிப்பில்) ஏற்படும் தொடர் பிழைகள், நடைமுறையில் பெரும்பாலான பிழைகள் நெருக்கத்தில் (வெடிப்பில்) தான் ஏற்படுகின்றன.

bursting : வெடித்தல் : தொடர்ச்சியான படிவ காகிதத்தைத் தனித் தாள்களாகப் பிரிக்கும் செயல்முறை.

burst mode : வெடிப்பு முறை : தடை செய்யமுடியாத முறையில் தரவுகளைப் படிக்கும் அல்லது எழுதும் முறை.

burst mode transfer : வெடிப்பு பாங்கு மாற்றம் : குறுவட்டு (CD-Rom) விலிருந்து தகவல் பரிமாற்றம். சராசரி தகவல் பரிமாற்றம் விகிதமான 150 கிலோ பைட்/நொடி (முறை 1) அல்லது 171 கிலோ பைட்டுகள்/நொடி (முறை 2) ஆகியவற்றைவிட பல மடங்கு பெரியது. ஸ்கஸ்ஸி (SCSI) தொகுதியைவிட அதிக வேகத்தை இது எடுக்க முடியும்.

burst speed : வெடிப்பு வேகம் : 1. வெடிப்பு முறை தரவுப் பரி மாற்றத்தில், ஒரு சாதனம் இடையூறின்றி தரவுவை அனுப்பக் கூடிய உச்ச அளவு வேகம். பல் வேறு தகவல் தொடர்புச் சாதனங்கள் வெடிப்பு முறையில் தகவலை அனுப்ப வல்லவை. வெடிப்பு முறையில் தகவல் பொட்டலங்களை அனுப்பும்போது அதன் தகவல் பரிமாற்ற வேகம் அதிகரிக்கப்படுகிறது. 2. ஒர் அச்சுப்பொறி அடுத்த வரிக்கு வராமல்

ஒரே வழியில் ஒரு வினாடி நேரத்தில் அச்சடிக்கும் எழுத்துகளின் எண்ணிக்கை. தாளைத் தள்ளும் நேரம், அச்சுமுனை அடுத்தவரிக்கு வர எடுத்துக் கொள்ளும் நேரம் இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கணக்கிடப்படும் வேகம் இது. அச்சுப்பொறி உற்பத்தியாளர்கள் கூறிக்