பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bursty

193

bus extender


கொள்ளும் அச்சிடும் வேகம் உண்மையில் அதன் வெடிப்பு வேகத்தைத்தான். ஆனால் உண்மையில் அச்சுப் பொறியின் செயல்திறன் ஒரு பக்கம் முழுமையும் அடிக்க எடுத்துக் கொள்ளும் மொத்த நேரத்தைக் கொண்டே கணக்கிடப்படும்.

bursty : வெடிப்பி; வெடிப்பு முறை : தகவல் பரிமாற்றத்தில் தொடர்ச்சியாகத் தரவை அனுப்புவதற்குப் பதில் வெடிப்பு முறையில் துண்டு துண்டாக அனுப்பும் முறை.

bus : மின் பாட்டை : தகவல் மற்றும் மின் சமிக்கைகளை அனுப்புவதற்கான பாதை அல்லது வழித்தடம்.

bus architecture : மின்பாட்டைக் கட்டுமானம். :

bus bridge : மின்பாட்டைப் பாலம் : இரண்டு மின் பாட்டைப் தொகுதிகளை ஒன்றாக இணைக்கும் சாதனம்.

bus card : மின் பாட்டை அட்டை : விரிவாக்க அட்டை. இது கணினியின் விரிவாக்க மின்பாட்டையில் பொருத்தப்படுவது.

bus common : பொது மின் பாட்டை : வன்பொருள் சாதனங்களுக்கோ கணினியின் உள் பாகங்களுக்கோ அல்லது தகவல் தொடர்பு கட்டமைப்பில் இரு நிலைகளுக்கிடையிலோ செயல்படும் வழித்தடம். ஒரு கணினியில் மின்பாட்டைத் தொகுதி அமைப்பு பயன்படுமானால், அதன் செயலகங்கள், நினைவகம், வெளிப்புற அலகுகள் ஆகிய அனைத்தும் மின்பாட்டை ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. மின் இணைப்புத் தொகுதியில் இரண்டு வழித்தடங்கள் உள்ளன. ஒன்று தகவல் இருக்கும் இடத்தைக் கண்டறியவும், மற்றொன்று தகவலை மாற்றவும் செய்கிறது. கட்டமைப்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் மின்பாட்டை இணைக்கப்படும்.

bus enumerator : மின் பாட்டைக் கணக்கெடுப்பி : ஒரு குறிப்பிட்ட மின்பாட்டையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சாதனங்களையும் கண்டறிந்து ஒவ்வொன்றுக்கும் தனித்த அடையாளக் குறியீடு அளிக்க வல்ல ஒரு சாதன இயக்கி (device drive) ஆணைத் தொகுப்பு. ஒரு கணினியை இயக்கியவுடன், கணினியில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சாதனங்களின் தகவல்களையும் நினைவகத்தில் ஏற்றும் பணியை இக்கணக்கெடுப்பியே கவனித்துக் கொள்கிறது.

bus extender : மின்பாட்டை விரிவாக்கம் : சோதனைக்காக


3