பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

button bomb

197

byte


செய்யவோ அதிகம் பயன் படுத்தப்படுவது.

button bomb : குண்டுப் பொத்தான்; பொத்தான் குண்டு : இணையத்திலுள்ள வலைப் பக்கத்தில் பல்வேறு செயல்முறைகளை இயக்க பல்வேறு உருவங்களில் பொத்தான்கள் அமைக்கப்படுவது உண்டு. சுட்டியின் சுட்டுக்குறியை ஒரு பொத்தான்மீது வைத்துச் சொடுக்கும்போது அதற்குரிய பணி செயல்படுத்தப்படும். குண்டின் உருவத்தில் தோற்றமளிக்கும் பொத்தான், 'பொத்தான் குண்டு' எனப்படுகிறது.

button, help : உதவிப் பொத்தான் : பயனாளர் கணினித் திரையில் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பினை பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது, ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் திரையில் தோன்றும் ஒரு பொத்தான் அல்லது ஒரு சின்னத்தின் மீது கட்டுக் குறியை வைத்துக் சொடுக்கினால் உதவிக் குறிப்புகள் திரையில் விரியும். வைய விரிவலைப் பக்கங்கள், பல்லூடகச் சேவை நிலையங்கள், கணினி வழியாகக் கற்பித்தல் ஆகியவற்றில் பயனாளர் தாமாக அறிந்து கொள்ளும் வகையில் இத்தகைய பொத்தான்கள்/சின்னங்கள் அமைக்கப்படுகின்றன.

. bw : . பி. டபிள்யூ : இணையத்தில் குறிப்பிட்ட தளம் போட்ஸ்வானா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்க தள முகவரியில் இடம்பெறும் பெருங்களப் பெயர்.

by default : உள்ளிருப்பாய் : இயல்பாகவே.

bypass : மாற்றுவழி : சுருக்கு வழி : ஒரு மின்சுற்றில் ஒன்று அல்லது பல பொருள்களைச் சுற்றிச் செல்லும் இணைவழி.

bypass capacitor : மாற்றுவழி தாங்கி : மின்சக்தி வழங்குதலின் போது ஏற்படும் மின்சார இரைச்சலைக் குறைக்க உதவும் தாங்கி.

Byron Lady Ada Augusta : பைரன் அடா அகஸ்டா சீமாட்டி : லவ்லேஸ் பெருமகள் என்று அழைக்கப்படுபவர். புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன் பிரபுவின் மகளே செல்வி பைரன். சார்லஸ் பாபேஜியிடம் அவர் நெருங்கிப் பணியாற்றி, அவரது பகுப்பு எந்திரத்திற்கு ஒரு விளக்க நிரலைக் கொடுத்தார். உலகின் முதல் நிரலர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அடா என்னும் நிரல் மொழி அவரது நினைவாக பெயரிடப்பட்டது.

byte : பைட் : எண்மி : 1. கணினியில் ஒரு தனி அலகாக செயல்படும் அடுத்தடுத்துள்ள