பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

callback modem

205

calligraphic graphics


திருடினாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

call back modem : திரும்ப அழைக்கும் இணக்கி : திரும்ப அழைப்புப் பாதுகாப்பு முறையில் பயன்படுத்தப்படும் இணக்கி. வெளியிலிருந்து தொலைபேசி மூலம் கணினி அமைப்பை அணுகும்போது பயனாளர் ஒரு மறைக்குறியீட்டைத் தருவார். ஏற்கெனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ள அட்டவணையில் மறைக்குறியீடு சரிபார்க்கப்பட்டு அக்குறியீட்டுக்குரிய பயனாளரின் தொலைபேசி எண்னைத் தானாகவே தொடர்பு கொண்டு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும்.

Callback PPD : மீண்டும் அழைக்கும் பீபீடி : வருகின்ற அழைப்புகளைக் கண்காணிக்கும் ஒரு சாதனம்.

call blocking : அழைப்புத்தடுப்பி.

call by reference : குறிப்பு மூலம் அழைத்தல் : அழைத்தல் நிரலாக்கத்தில், துணை நிரல்கூறில் பயன்படுத்தப்படும் மாறிகளின் நினைவக முகவரிகளையே அளபுருகிகளாக துணை நிரல் கூறலுக்கு (Subroutine) அனுப்பி அழைக்கும் முறை.

call by value : மதிப்பு மூலம் அழைத்தல் : நிரலாக்கத்தில் பயன்படுத்தப்படுவது. துணை நிரல்கூறுகளில் முறைகளில் பயன்படுத்தப்படும் அளபுருக்களின் உண்மை மதிப்புகளை அவற்றுக்கு அனுப்பி அழைக்கும் முறை.

call cleaning : அழைப்பு நிறை வேற்றம்.

call connected packet : அழைப்பு இணைத்த பொதிவு.

called routine : அழைக்கப்பட்ட‌ நிரல்கூறு : ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்றும் ஒரு துணை நிரல். இதை ஒரு அழைப்பு அல்லது நிரலின் கிளைபிரி ஆணையின் மூலம் அணுக முடியும்.

called terminal : அழைக்கப்பட்ட‌ முனையம்.

caller ID : அழைத்தவர் அடையாளம்.

call establishment : அழைப்பு ஏற்படுத்துகை; நிறுவுகை.

calligraphic graphics : எழுத்து வனப்பு வரைபடங்கள்; வரி வடிவ வரைவியல் : ஒரு ஒழுங்கில்லாத வகையில் ஒழுங்கில்லாத திசைகளை நோக்கி இழுக்கப்பட்ட கோடுகளைக்