பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cancelbot

208

canned software


cancelbot : தவிர்க்கும் எந்திரன் : இணையத்தில் செய்திக் குழுக்களில் வெளியிடப்படுவதற்காக அடுக்கப்பட்ட கட்டுரைகளில் ஒவ்வாதவற்றைக் கண்டறிந்து நீக்குகின்ற ஒரு நிரல். பலருக்கும் அனுப்பப்படுவதற்கு முன்பாகக் கண்டறிந்து நீக்கும். நீக்கப்படுவதற்கான அடிப்படை வரையறையை அந்த நிரலை உருவாக்கியவரே நிர்ணயம் செய்கிறார். எனினும் பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான தவிர்க்கும் எந்திரன்கள், பலநூறு செய்திக் குழுக்களில் இடம்பெறும் எண்ணற்ற உதவாக்குப்பைச் செய்திக் குறிப்புகளைக் கண்டறிந்து நீக்கி விடுகின்றன.

cancel button : தவிர் பொத்தான்.

cancel character : தவிர் எழுத்துரு.

cancel message : தவிர்க்கும் செய்தி : யூஸ்நெட் எனப்படும் செய்திக் குழுக்களுக்கான வழங்கன் கணினிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சில கட்டுரைகளை வெளியிடாமல் தவிர்க்கவும், அல்லது கணினியில் இருந்தே நீக்கிவிடவும் அக்கணினிக்கு அனுப்பப்படும் ஒரு செய்தி.

candidate key : அடையாள திறவி : ஒர் அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட கிடக்கையை (Row) தனித்து அடையாளங்காணப் பயன்படும் புலம். கூட்டு முதன்மைத் திறவியின் (Compound Primary Key) ஓர் அங்கமாக இருக்கும்.

candidates : வேட்பாளர்கள் : ஒரு திட்டத்தின் தொடக்க வடிவமைப்பு நிலையில் வழங்கப்படும் மாற்றுத் திட்டங்கள்.

canned programme : தயார் நிலை நிரல் : ஒரு சிக்கலுக்கு நிலையான தீர்வை வழங்கும் நிரல் தொகுதி. கணினி உற்பத்தியாளர்கள் மற்றும் மென் பொருள் உருவாக்குபவர்கள் பயன்படுத்தத் தயாரான நிலையில் பயனாளருக்கு அளிக்கும் இந்த நிரல்களை தனி நபர்களும், பல வணிக நிறுவனங்களும் பயன்படுத்த ஏற்றதாக உள்ளது. Custom Software-க்கு எதிர்ச் சொல்.

canned routine : அடைக்கப்பட்ட நிரல் கூறு : ஒரு குறிப்பிட்ட கணினியில் பயன்படுத்துவதற்காக முன்னதாக எழுதப்பட்ட நிரல். ஒரு குறிப்பிட்ட செயலாக்கப் பணியைச் செய்யும் துணை நிரல்கூறு (சப்ரொட்டீன்).

canned software : தயார் நிலை மென்பொருள் : உடனே பயன்படுத்தத் தயாரான நிலையில்