பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

capacitor storage

210

capstan


மின்சக்தியை தேக்கி வைக்கும் மின்சாதனம். முறையாகக் கிளப்பி விட்டால் மின்சக்தியை வெளியிடும். கணினி சேமிப்பகத்தில் துண்மிகளை எழுதும் முறையும், படிக்கும் முறையும் இதுதான்.

capacitor storage : மின்தேக்கி சேமிப்பகம்; மின்னுறைகலன் சேமிப்பகம் : மின்தேக்கிகளைப் பயன்படுத்தி தரவுகளை சேமிக்கும் ஒரு சேமிப்புச் சாதனம்.

இழுவிசைப் பொறி

capacity : கொள்திறன் : ஒரு சேமிப்பகச் சாதனத்தில் எவ்வளவு தரவுகளைச் சேமித்து வைக்க முடியும் என்பது கணினிச் சொற்கள், பைட்டுகள், எழுத்துகள் போன்ற பல வகைகளில் கூறப்படுகிறது.

capacity management : திறன் நிர்வாகம் : தரவு செயலாக்கப் பணிகளின் அளவு, வன்பொருள் மென்பொருள், பயன்பாடு மற்றும் பிற கணினி அமைப் புத் தேவைகளைக் கட்டுப்படுத்தி, வருவது வரைக்கும் திட்டமிடல் மற்றும் கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்தல்.

capacity, memory : நினைவகக் கொள்திறன்.

cap height : தலைப்பெழுத்து உயரம் கீழ் வரியிலிருந்து தலைப்பெழுத்தின் உயரம்.

caps : தலைப்பெழுத்துகள்; பெரிய எழுத்து மேல் எழுத்துகள் : All Caps என்றால் எல்லா எழுத்துகளும் தலைப்பெழுத்துகளாக வேண்டும். Initial caps என்றால் ஒவ்வொரு முக்கிய சொல்லிலும் முதல் எழுத்து தலைப்பெழுத்தாக்கப்பட வேண்டும்.

capstan : இழுவிசைப் பொறி : ஒரு நிலையான வேகத்தில் பதிவு செய் யும் முனையை, நாடாவின் குறுக்காக இழுக்கும் காந்த நாடா இயக்கியின் சுழலும் சாதனம்.