பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cascaded carry

220

cascading style sheets


கையில் சீட்டுகளை ஒன்றடுத்து மற்றொன்றை அடுக்கி வைத்திருப்பதுபோல, அடுக்கி வைக்கும் முறை. விண்டோஸ் பணிச் சூழலில் ஒரு நேரத்தில் திறக்கப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட சாளரங்களை இம்முறையில் அடுக்கி வைக்கலாம். 1. ஒரு சாளரத்தில் அமையும் உரையாடல் பெட்டியில் (dialog box) உரைப்பெட்டி (text box), பட்டியல் பெட்டி (list box), தேர்வுப்பெட்டி (check box), கட்டளைப் பொத்தான்கள் (command buttons) போன்ற அனைத்து இயக்குவிசைப் பொருட்களையும் ஒரே திரையில் அமைக்க முடியாதபோது ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட திரைகளில் அவற்றை அடுக்கிவைப்பர். 2. இணையச் செய்திக் குழுக்களில் ஒரு செய்தி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அனுப்பப்படும்போது மூலச் செய்தியில் ஒவ்வொரு வரியிலும் > என்ற அடையாளம் சேர்க்கப்படும். அவரிடமிருந்து இன்னொருவர்க்குப் போகும் போது இன்னொரு அடையாளம் சேர்க்கப்படும். இதுபோல் சேர்ந்துகொண்டே போகும்.

cascaded carry : அடுக்கிய மிகுதி : மொத்தத் தொகையில், மிகுந்திடும் எண்ணைச் சேர்க்கும் முறை.

cascade connection : அடுக்கு இணைப்பு : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒரே மாதிரியான துணைச் சாதனங்களை ஒன்றோடொன்று இணைத்தல். ஒன்றின் வெளியீடு அடுத்ததன் உள்ளிட்டுடன் இணைக்கப்படும்.

cascade control : அடுக்கு கட்டுப்பாடு : கட்டுப்பாட்டுச் சாதனங்கள் சங்கிலியைப் போன்று இணைக்கப்பட்டுள்ள தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொன்றும் அடுத்ததற்குக் கொடுப்பதுடன் அடுத்த நிலையை ஒழுங்குபடுத்தும்.

cascade sort : அடுக்கு வரிசையாக்கம் : வெளிப்புற நாடா கொண்டு வரிசைப்படுத்தும் ஒரு முறை.

cascading menu : அடுக்குப்பட்டியல் : ஒரு பட்டியிலிருந்து கொண்டு அடுத்த பட்டியைத் தொடங்குதல். இத்தகைய பட்டியில் இதை அடுத்து வலது அம்புக்குறி இருக்கும்.

cascading style sheets : அடுக்கி வைத்த அழகுத் தாள்கள் : ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப்படும் இணைய ஆவணங்களில் சிறப்புத்தன்மை வாய்ந்த, அழகாக