பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. CC

225

CCITT groups


Сору அல்லது Courtesу Сору என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஒருவருக்கு அனுப்பும் மின்னஞ்சல் செய்தியை அப்படியே இன்னொருவருக்கு அனுப்ப, மின்னஞ்சல் மென்பொருளில் வழியுள்ளது. To என்பதில் அஞ்சல் பெறுபவரின் முகவரியைத் தரவேண்டும். CC என்பதில் வேறு ஒருவரின் அல்லது பலரின் முகவரியைத் தரலாம். அவர்களுக்கும் அஞ்சல் சென்று சேரும். CC-யில் தரப்பட்ட முகவரிதாரர்கள் அனைவரும் இந்த மடல் வேறு எவருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் முடியும். இந்த வகையில் bcc என்று குறிப்பிட்டு இன்னும் சிலருக்கு அதே மடலை அனுப்பிவைக்கும் முறையிலிருந்து மாறுபடுகிறது. bcc-யில் குறிப்பிடப்படும் முகவரி தாரர்களுக்கும் மடல் கிடைக்கும். ஆனால், இந்த மடல் எவருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிய முடியாது. (bcc-blind carbon Copy).

. cc : . சிசி : இணையத்தில் தள முகவரி காகஸ் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் களப்பிரிவு.

CCD : சிசிடி : மின்னூட்டச் சேர்ப்பு சாதனம் என்று பொருள்படும் Charge Coupled Device என்பதன் குறும்பெயர். மின்னுட்டப் பிணைப்பு சாதனம் என்பதன் சுருக்கப் பெயர்.

CCFT : சிசிஎஃப்டி : Cold Cathode Fluorescent Tube என்பதன் குறும்பெயர். பின்புற ஒளி வரும் திரையில் ஒளி உண்டாக்கும் வகைகளில் ஒன்று. மற்ற பின்புற ஒளிகளைவிட அதிக எடையுடனும், அதிக மின்சாரம் வாங்குவதாகவும் இது உள்ளது.

CCITT : சிசிஐடீடி : Consultative Committee International Telegraph and Telephone என்பதன் குறும்பெயர். பன்னாட்டுத் தந்தி மற்றும் தொலைபேசி ஆலோசனைக் குழு என்பதன் சுருக்கப் பெயர். உலகளாவிய தர நிர்ணயங்களை தரவு தொடர்புத் துறையில் உருவாக்குவதற்காக ஐக்கிய நாடுகள் பேரவை உருவாக்கியுள்ள ஒரு நிறுவனம்.

CCITT Groups 1-4 : சிசிஐடீடீ 1-4 விதிகள் : பன்னாட்டுத் தந்தி - தொலைபேசி ஆலோசனைக் குழு (International Telegraph and Telephone Consultative Committee) தொலைநகல் எந்திரங்களின் மூலமாக பட உருவங்களை குறியீடுகளாக்கவும் மறு


15