பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CD-I

228

CD Recorder


யூனிக்ஸ் கணினியில் நிறுவும் போது இது போன்ற கட்டளைச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

CD-I : சிடி-ஐ : ஊடாடும் குறுவட்டு என்று பொருள்படும் Compact Disk-Interactive என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒளிவ வட்டு (optional disk) த் தொழில்நுட்பத்தில் வன்பொருள்/மென்பொருள் பற்றிய தர நிர்ணயம். படஉருவக் காட்சி, உருத்தெளிவு, அசைவூட்டம் கேட்பொலி மற்றும் சிறப்பு விளைவுகள் ஆகிய கூறுகளை சிடி-ஐ உள்ளடக்கியது. இத் தர நிர்ணயம் தரவுவைக் குறியீடாக்கல், இறுக்கிச் சுருக்குதல், சுருக்கியவற்றை விரித்தல், பதிவான தரவுவை திரையிடல் ஆகிய செயல்முறைகளையும் உள்ளடக்கியது.

C DOT : சி-டாட் : Centre for Development of Telematics (Telecommunications) என்பதன் குறும்பெயர். இந்திய அரசு நிறுவனம்.

CDP : சிடிபீ : தரவு செயலாக்கத்தில் சான்றிதழ் படிப்பைக் குறிக்கும் Certificate in Data Processing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினி மற்றும் நிரலாக்கம், மென்பொருள் உருவாக்கம், முறைமை ஆய்வு உட்பட, கணினி தொடர்பான துறைகளில் சில தேர்வுகளை எழுதித் தேர்ச்சிபெறும் தனி நபர்களுக்கு இன்ஸ்டிடியூட் ஃபார் சர்ட்டிஃபிகேஷன் ஆஃப் கம்ப்யூட்டர் புரொஃபஷனல்ஸ் என்ற நிறுவனம் இந்தச் சான்றிதழை வழங்குகிறது.

CD Player : சிடி இயக்கி.

CD plus : சிடி பிளஸ் : குறுவட்டில் தரவுவைப் பதியும் முறை. கணினித் தரவுகளையும் கேட்பொலிப் பதிவுகளையும் ஒரே குறுவட்டில் பதிய இம்முறை வழிவகுக்கிறது. தரவு பகுதியைப் படிக்கும்போது கேட்பொலிப் பதிவுகளோ, கேட்பொலிப் பகுதியை இயக்கும்போது தரவு பகுதியோ பாதிக்கப்படுவதில்லை.

CD-R : சிடி-ஆர் : பதிதகு குறுவட்டு எனப் பொருள்படும் Compact Disk Recordable என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். குறுவட்டு எழுதி (CD writer) மூலம் தகவலைப் பதிப்பித்து, குறுவட்டகத்தில் வைத்துப் படிக்க முடிகிற ஒரு வகைக் குறுவட்டு.

CD Recorder : குறுவட்டெழுதி : குறுவட்டுப் பதிவி : ஒரு குறுவட்டில் எழுதும் சாதனம். குறு