பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

computer process

313

computer revolution


பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் இவர்கள் சேர்ந்த ஒரு வணிக அமைப்பு.

computer process : கணினிச் செயலாக்கம்; கணினி செயற்பாங்கு : கணினி நடைமுறை.

computer process control system : கணினி செயல்முறைக் கட்டுப்பாடு அமைப்பு : இலாப நோக்கில் பொருளை உற்பத்தி செய்ய மேற்கொள்ளப்படும் செயல்முறையையும் அதன் மாற்றங்களையும் கண்காணிக்கும் சென்சார்களுடன் இணைக்கப்பட்டுள்ள கணினிக் கட்டுப்பாட்டு அமைப்பு.

computer processing cycle : கணினி செயலாக்கச் சுழற்சி : 1. ஒரு சிக்கலைத் தீர்க்க கணினியைப் பயன்படுத்துவதில் உள்ள நிலைகள். பேசிக் அல்லது ஃபோர்ட்ரான் போன்ற மொழியில் நிரல் எழுதுவது. நிரலைக் கணினியில் உள்ளீடு செய்து மொழிபெயர்க்கச் செயலாக்குவது. 2. அடிப்படைச் செயலாக்கச் சுழற்சியில் உள்ளீடும் / வெயீயிடும்.

computer programme : கணினி நிரல் : ஒரு தரவு செயலாக்கப் பணிக்குத் தேவையான தொடர்ச் செயல்களை முறையாக, கணினிக்கு எடுத்துரைப்பது. ஒரு குறிப்பிட்ட செயல் முறை அல்லது பணியைச் செய்யுமாறு நிரல்களையும், சொற்றொடர்களையும் அமைத்தல்.

computer programmer : கணினி நிரலர் : ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யுமாறு கணினிக்கு ஆணையிடும் நிரல்களை வடிவமைத்து எழுதி, சோதித்துத் தருவதை வேலையாகக் கொண்டுள்ளவர்.

computer readable : கணினி படித்தகு : கணினி படித்துப் பொருள் கொண்டு நிறைவேற்றும் வடிவில் அமைந்த ஆணை. இருவகையான தரவு கணினி படித்தகு என்று சொல்லப்படுகிறது. பட்டைக் கோடுகள், காந்த நாடா, காந்த கையெழுத்துகள் மற்றும் வருடிப் பார்த்து அறிந்து கொள்ளும் ஏனைய வடிவங்கள் இவையனைத்தும் கணினி படித்தகு தகவலாகும். கணினியின் நுண் செயலிக்குப் புரியும் வகையில் எந்திர மொழியில் இருக்கும் தரவு.

computer revolution : கணினிப் புரட்சி : தரவு தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுவரும் அதிவேக வளர்ச்சி காரணமாக சமூக, தொழில்நுட்பத் துறைகளில் கணினியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக