பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

convert

340

cookie


பதின்மம் இருமை பதினாறின் எண்முறை எண்ம எண்முறை
0 00000 0 0
1 00001 1 1
2 00010 2 2
3 00011 3 3
4 00100 4 4
5 00101 5 5
6 00110 6 6
7 00111 7 7
8 01000 8 10
9 01001 9 11
10 01010 A 12
11 01011 B 13
12 01100 C 14
13 01101 D 15
14 01110 E 16
15 01111 F 17
16 10000 10 20

convert : மாற்று : ஒரு எண் அடிப்படையிலிருந்து வேறொரு எண் அடிப்படைக்குத் தகவலை மாற்றுதல். 2. நெகிழ் வட்டிலிருந்து நிலைவட்டுக்கு என்பது போன்று ஒரு வகையான இருப்பிடத்திலிருந்து வேறொன்றுக்கு மாற்றுதல்.

convert data base : தரவுத் தளத்தை மாற்று.

converter : மாற்றி : 1. ஒரு வகையான ஊடகத்திலிருந்து வேறு வகையான ஊடகத்திற்குத் தரவுவை மாற்றும் சாதனம். துளையிட்ட அட்டைகளிலிருந்து தரவுவைப்பெற்று காந்த வட்டுகளில் பதிவு செய்வதைப் போன்றது. 2. தொடர் முறையிலிருந்து இலக்க முறைக்கு என்பது போல் ஒரு வடிவத்தில் உள்ள தரவுவை வேறு ஒரு வடிவத்திற்கு மாற்றுதல்.

converter, analog/digital : தொடர்முறை - இலக்கமுறை மாற்றி.

converter, digital/analog : இலக்க முறை - தொடர்முறை மாற்றி.

convertion, binary to decimal : இரும, பதின்ம மாற்றுகை.

convex : புற வளைவு : குவி.

cookbook : பயனாளர் கையேடு : ஒரு நிரலாக்கத் தொடரை எவ்வாறு நிறுவி பயன்படுத்துவது என்பதை படிப்படியாக விவரிக்கும் ஆவணம்.

cookie : குக்கி : 1. வாடிக்கை யாளராகிய கிளையன் (client) கணினியின் கோரிக்கைக்கு மறுமொழியாக வழங்கன் (server) கணினி அனுப்புகின்ற தரவு தொகுதி. 2. வைய விாவலையில் ஒரு வலை வழங்கன் கணினி, கிளையன் கணினியில் பதிவு செய்கின்ற தரவு தொகுதி. பயனாளர் மீண்டும். அதே தளத்தைப் பார்வையிடும் போது, இணைய உலாவியானது குக்கியின் ஒரு நகலை வலை