பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cookie filtering tool

341

co-ordinate


வழங்கனுக்கு அனுப்பி வைக்கும். பயனாளர்களை அடையாளம் காணவும், பயனாளருக்கு ஏற்ற வகையில் வலைப்பக்கத்தை வடிவமைத்து அனுப்புமாறு வழங்கனுக்கு அறிவுறுத்தவும் மற்றும் பிற நிர்வாகப் பணிகளுக்கும் குக்கிகள் பயன்படுகின்றன. 3. தொடக்க காலத்தில் யூனிக்ஸ் இயக்கமுறைமையில்தான் இத்தகைய குக்கி நிரல்கள் இயக்கப்பட்டன. அதிர்ஷ்ட குக்கி என அழைக்கப்பட்டது. ஒவ்வொரு முறை இந்த நிரலை இயக்கும் போதும் வெவ்வேறு அதிர்ஷ்ட செய்திகள் வெளியிடப்படும். பொதுவாக, ஒரு பயனாளர் யூனிக்ஸ் முறைமைக்குள் தன்னை இணைத்துக்கொள்ளும்போது (logon) இந்த குக்கி நிரல் இயக்கப்படும். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு செய்தி பயனாளருக்குக் கிடைக்கும்.

cookie filtering tool : குக்கி வடிகட்டிக் கருவி : ஒரு வலைத்தளத்தை அணுகும்போது பயனாளரைப் பற்றிய தரவுகளை, வலை உலாவி மூலம் அனுப்பிவிடாமல் குக்கியைத் தடைசெய்யும் ஒரு பயன் கூறு (utility).

coolants : குளிர்விப்பான்கள்.

cooling fan : குளிரூட்டும் விசிறி : மின்சுற்று அட்டைகளும், ஐ. சி-க்களும் குளிர்ச்சியாக இருக்குமாறு வைத்துக் கொள்ளும் ஒரு சிறிய காற்றாடி.

co-operating sequential process : கூட்டுறவு வரிசைமுறைச் செயலாக்கம்.

co-operative multitasking : கூட்டுறவு பல்பணி முறை : பல்பணிச் செயலாக்கத்தில் ஒரு வகை. ஒரு முன்புலப் பணியின் இடைநேரத்தில், ஒன்று அல்லது மேற்பட்ட பின்புலப் பணிகளுக்கான செயலாக்க நேரத்தை முன்புலப் பணி அனுமதிக்கும்போது மட்டுமே ஒதுக்க முடியும். மெக்கின்டோஷ் இயக்க முறைமையில் இதுதான் முதன்மையான பல்பணி முறையாகும்.

co-operative processing : கூட்டுறவு செயலாக்கம் : பெருமுக கணினி, சிறு கணினி மற்றும் பீ. சி. போன்ற இரண்டு அல்லது மேற்பட்ட கணினிகள் ஒரு வேலையைப் பங்கிட்டுக் கொள்ளல். அதிகத் திறனுக்காக வேலையைப் பகுத்துக் கொள்ளல்.

co-operative work : கூடிப் பணியாற்றல்; கூடிச் செயல் படல்.

co-ordinate : ஆயத்தொலை; சந்திப்புள்ளி : கார்ட்டீசிய ஒருங்கிணைப்பு அமைவின் ஒரு இடத்தைக் குறிப்பிடும் தொடர்