பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

AC

35

accelerator card


ஏ/பி நிலைமாற்று விசைப் பெட்டி


பட்ட ஒரு உள்வீட்டிலிருந்து, ஒற்றை வெளியீட்டுக்கு.

AC : ஏசி மாற்று மின்விசையைக் குறிக்கும் Alternating Current என்பதன் குறும் பெயர். இவ்வகை மின்சாரமே இல்லம், பள்ளிகள், வணிக அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

AC adapter : ஏசி (மாற்று மின் விசை) ஏற்பி : ஏசி இயைபி, ஏசி

ஏசி ஏற்பி


தகவி; மாற்று மின் இயைபி : 110 அல்லது 220 வோல்ட் அளவுள்ள வீட்டு மின்சாரத்தை, கணினி உறுப்புகளுக்குத் தேவைப்படுகின்ற குறைந்த மின் அழுத்தம் கொண்ட நேர்மின்சாரமாக மாற்றித்தரும் ஒரு புறச் சாதனம்.

academic network : கல்வித் துறைப் பிணையம்.

ACC : ஏசிசி : ஆஸ்திரேலிய கணினி மாநாடு என்பதைக் குறிக்கும் Australian Computer Conference என்பதன் குறும் பெயர். ஆஸ்திரேலிய கணினிச் சங்கத்தின் ஆண்டு மாநாடு.

accelerated graphics port (AGP) : முடுக்கு வரைகலைத் துறை.

acceleration time : முடுகு நேரம்; முடுக்கல் நேரம்.

accelerator : முடுக்கி; வேகப்படுத்தி : ஒரு பணியை விரைவு படுத்தும் முக்கிய இணைப்பு.

accelerator board : முடுக்குப் பலகை வேகமூட்டிப் பலகை.

accelerator card : முடுக்கி அட்டை : கணினியின் மைய நுண்செயலிக்குப் பதிலாக அல்லது அதன் வேகத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படும் அச்சு மின் சுற்றுப் பலகை (printed circuit board). இதனால் கணினியின் வேகத் திறன் அதிகரிக்கும்.