accelerator key
36
ACCESS bus
accelerator key : முடுக்கு விசை.
accept : ஏற்றுக்கொள்.
acceptable user policy : ஏற்கத்தக்க பயனாளர் கோட்பாடு : ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கை; இணையச் சேவையாளர் அல்லது இணையத்தில் தகவல் சேவை வழங்குபவர் வெளியிடும் ஒர் அறிக்கை. இணையச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் பயனாளர் எந்தெந்த நடவடிக்கையில் ஈடுபடலாம் அல்லது ஈடுபடக் கூடாது என்று குறிப்பிட்டுக் காட்டும் அறிக்கை. எடுத்துக் காட்டாக, பயனாளர்கள் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதைச் சில இணையச் சேவையாளர்கள் அனுமதிப்பதில்லை.
acceptance test : ஏற்புச் சோதனை : புதிய கணினி முறைமை ஒன்றின் திறன்களையும் செயல்பாட்டையும் விளக்குவதற்கான சோதனை. கணினி முறைமை செயலொழுங்கு நிலையில் உள்ளது என்பதை நுகர்வோர்க்கு உணர்த்த உற்பத்தியாளரால் பெரும்பாலும் இச்சோதனை நிகழ்த்தப்படுகிறது.
access : அணுகல் : 1. விரும்பும் தகவலைக் கண்டறிய பொதுவாக கணினி முறைமையை அல்லது ஒரு தரவுத் தளத்தை அணுகுதல். 2. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தரவுத்தள மென்பொருள்.
access arm : அணுகு கை : பெறுநிலைக் கரம் : காந்த வட்டுக் கோப்பு சேமிப்பகத்தில் படித்தல் மற்றும் எழுதுதலுக்கான பொறியமைவை குறிப்பிட்ட நிலையால் பொருத்த உதவும் எந்திர உறுப்பு.
ACCESS bus : அணுகு பாட்டை; அணுகு மின்வழி : கணினியுடன் புறச் சாதனங்களை இணைக்கப் பயன்படும் இருதிசை மின்