பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

access code

37

access light


இணைப்புத் தொகுதி. அச்சுப் பொறிகள், இணக்கிகள், சுட்டிகள், விசைப் பலகைகள் போன்ற 125 குறைவேகப் புறச் சாதனங்களை ஒற்றைப் பொதுப் பயன் வாயில் மூலமாக, இந்த அணுகுபாட்டையில் கணினியுடன் இணைக்க முடியும். இதற்கு புறச் சாதனங்கள், தொலைபேசி செருகி போன்ற இனைப்பானால் பொருத்தப்படுகின்றன. ஆனால் கணினி ஒவ்வொரு புறச்சாதனத்துடனும் நேரடியாக தொடர்பு கொள்கிறது. கணினி செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதே புறச்சாதனத்தைப் பொருத்தலாம். கணினி, தானாகவே அதற்கொரு முகவரியை ஒதுக்கி செயல் நிலைக்கு கொண்டுவந்து விடும். டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் உருவாக்கியுள்ள இந்த அக்செஸ் பஸ், இன்டெல் நிறுவனத்தின் யுஎஸ்பி (universal serial bus) -க்குப் இணையானது எனலாம்.

access code : அணுகுக் குறி முறை : ஒரு கணினி முறைமையில் இயக்குவோரைக் குறிக்கும் எழுத்துகள் அல்லது எண்களின் குழு.

access control : அணுகுக் கட்டுப்பாடு : அணுகுக் குறியீட்டைப் பயன்படுத்தும் செயல்முறை. இதன் மூலம் ஒரு கணினியை அனுமதிக்கப்பட்டவர் மட்டுமே பயன்படுத்தும் வகையில் கட்டுப்படுத்தப்படுகிறது.

access control list : அணுகல் கட்டுப்பாட்டுப் பட்டியல் : வட்டில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள‌ ஒரு கோப்பினை அணுகவும், திருத்தம் செய்யவும் உரிமை பெற்றுள்ள பயனாளர்கள் அல்லது குழுக்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பட்டியல்.

access control register : அணுகுக் கட்டுப்பாட்டுப் பதிவகம் : செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கத்துக்கு தகவல் அணுகலைக் கொடுக்கும் எந்திரப் பதிவகம்.

access denied : அணுகல் மறுப்பு.

access event : அணுகல் நிகழ்ச்சி, அணுகு நிகழ்வு.

access hole : அணுகு துளை.

access immediate : உடனடி அணுகல்.

access level : அணுகு மட்டம்; அணுகு நிலை.

access light : அணுகு ஒளி : கணினி, ஒரு வட்டில் எழுதும் போதோ அல்லது படிக்கும் போதோ கணினி முகப்பில் ஒளியின் மூலம் சமிக்கை அளிப்பது.