பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

access limits

38

access path


வட்டு இயக்ககத்தில்கூட இது சில சமயம் இருக்கலாம்.

access limits : அணுகு எல்லைகள் : பாதுகாக்கப்பட்ட தகவல் கோப்புகளின் தொகுதியைப் படிக்கவோ, பயன்படுத்தவோ அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை.

access mask : அணுகல் மறைப்பி.

access mechanism : அணுகு பொறியமைவு : காந்த வட்டுச் சேமிப்பகத்தில் படித்தல் மற்றும் எழுதுதல் முனையை உரிய தடத்தில் நிறுத்தும் உறுப்பு.

access memory, random : குறிப்பின்றி அணுகு நினைவகம்.

access method : அணுகுமுறை : சேமிப்பு மற்றும் உள்ளீட்டு/வெளியீட்டுப் பொறிகளுக்கு இடையில் தகவல் பரிமாற்றத்துக்கு இயக்குவோர் பயன்படுத்தக்கூடிய பராமரிப்பு உத்திகளில் ஏதாவது ஒன்று.

access mode : அணுகு பாங்கு.

access monitoring : அணுகுக் கண்காணிப்பு : சரியான அனுமதிச் சொல்லைக் கொடுப்பதற்கு ஒருசில வாய்ப்புகளை மட்டுமே கொடுக்கும் அணுகுக்கட்டுபாட்டு முறை.

access number : அணுகு எண் : இணையத்திலுள்ள ஒரு சேவையை அணுகுவதற்கு சந்தாதாரர் பயன்படுத்தும் தொலைபேசி எண்.

accessibility : அணுகல் தரம்; அணுகுதிறன் அணுகுதரம் : ஏதேனும் ஒருவகையில் உடல் ஊனமுற்றவர்கள், நடமாடுவதில், பார்வையில், கேட்பதில் குறைபாடு உடையவர்கள், எவ்வித இடர்ப்பாடும் இல்லாமல் கையாள்வதற்கு ஏற்ற வகையில் கணினியில் அமைந்துள்ள வன்பொருள், மென்பொருள்களின் தரம்.

accessibility options : அணுகுமுறை விருப்பத் தேர்வுகள்.

accessory : துணையுறுப்பு : நெகிழ்வட்டு இயக்ககம், அச்சுப்பொறி போன்ற ஒரு வெளிப்புறச்சாதனம்.

access path : அணுகு பாதை; அணுகுவழி : ஒரு கோப்பின் இருப்பிடத்தைக் கண்டறிய, இயக்க முறைமை (operating system) பின்பற்றிச் செல்லும் பாதை. அணுகுபாதை ஒரு இயக்ககம் அல்லது வட்டுத் தொகுதி (disk volume) பெயருடன் தொடங்கும். அதனைத் தொடர்ந்து கோப்பகம் மற்றும் உள்கோப்பகங்களின் பெயர்கள் தொடர்ச்சியாக இடம் பெறும் (அவ்வாறு இருப்பின்). இறுதியில் கேப்பின் பெயர் இருக்கும். (எ. டு) : C : \WINDOWS\SYSTEM\abc. dll