பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. cu

361

current directory


. cu : சியூ : ஒர் இணைய தள முகவரி கியூபா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

CUBE : க்யூப் : பரோ கணினிப் பயனாளர்களின் கூட்டுறவு எனப் பொருள்படும் Cooperating User of Burroughs Equipment என்பதிலிருந்து பெறப்பட்ட சுருக்கப் பெயர். பரோ கணினிகளைப் பயன்படுத்துபவர்களின் அதிகாரப்பூர்வ அமைப்பு.

cue : க்யூ : கணினி பயன்படுத்தும் கல்வியாளர்கள் எனப் பொருள்படும் Computer Using Educators என்பதன் குறும் பெயர். கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் கணினிக் கல்வியை வழங்கும் ஒரு நிறுவனம்.

CUL 8 R : சியூஎல் 8 ஆர் : பிறகு சந்திக்கலாம் என்ற பொருள் படும் See You Later என்ற தொடரின் விந்தையான சுருக்கச் சொல். இணையக் கலந்துரையாடல்களில் கலந்து கொண்டுள்ள ஒருவர் தற்காலிகமாக அக்குழுவைவிட்டு நீங்கும் போது விடைபெறும் முகத்தான் குறிப்பிடும் சொல்.

cumulative record : திரட்டுப் பதிவேடு. current : மின்னோட்டம் : நடப்பு : 1. ஒரு கடத்தி வழியாக மின்னூட்டம் பாய்தல், அல்லது பாயும் அளவு. ஆம்பியர் என்னும் அலகினால் அளக்கப்படுகிறது. 2. ஒரு தரவுத் தளத்திலுள்ள அட்டவணையில் நடப்பு ஏடு என்கிறோம்.

current awareness system : நடப்பு உணரும் அமைப்பு : நடப்பு விழிப்புணர்வு அமைப்பு : தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலின் வகைகள் கிடைத்தவுடன் ஒரு மையக்கோப்பு அல்லது நூலகம் மூலம் ஒரு பயனாளருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிவித்துக் கொண்டிருப்பது.

current block : நடப்புத் தொகுதி : தொகுதிக் கோப்பு அணுகு முறையில் தற்போது அணுகப் படும் கோப்பில் உள்ள தரவுகளில் பதிவேட்டுத் தொகுதி

current cell : நடப்புக் கலம் : தரவுத் தாளில் நடப்பில் கிடைக்கக் கூடிய கலம்.

current data : நடப்புத் தரவு.

current database : நடப்புத் தரவு தளம்.

current directory : நடப்புக் கோப்பகம் : கணினி அமைப்பு நடப்பில் பயன்படுத்திவரும் வட்டு தரவுப் பட்டியல்.