பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

custodian

364

cut and paste


University) உருவாக்கிய ஒளிக் காட்சி கலந்துரையாடல் (video conference) மென்பொருள். விண்டோஸ் மற்றும் மேக் ஒஎஸ் பயனாளர்கள் இணையத்தில் நிகழ்நேர ஒளிக்காட்சி கலந்துரையாடலில் பங்கு பெறுவதற்கான முதல் மென்பொருளாகும் இது. ஆனால், இந்த மென்பொருள் செயல்பட அதிகமான அலைக்கற்றை வேண்டும். குறைந்தது 128 கேபிபீஎஸ் வேக அலைக்கற்றை இருந்தால் தான் சரியாகச் செயல்படும்.

custodian : பொறுப்பாளர்.

Custom : வழமை.

customer engineer : வாடிக்கையாளர் பொறியாளர் : கணினியைப் பழுது பார்க்கும் அல்லது கணினியில் தடுப்புப் பராமரிப் பினைச் செய்யும் அல்லது உள்ளீடு/வெளியீடு போன்ற சாதனங்களைப் பராமரிக்கும் நபர். Field Engineer என்றும் அழைக்கப்படுவார்.

custom IC : வாடிக்கையான ஒருங்கிணைப்புச் சுற்று. customic : வடிக்கையாக்கிய : ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாள ரின் வடிவமைப்பு மற்றும் அளவுக்கேற்ப உற்பத்தி செய்யப்படும் ஒருங்கிணைந்த மின்சுற்று (ஐ. சி).

customize : வடிக்கையாக்கல் : பொது நோக்க மென்பொருள் அல்லது வன்பொருள் ஒன்றின் செயல்திறனைக் கூட்டுதல் அல்லது மாற்றுதல். குறிப்பிட்ட பயனாளரின் தேவைக்குப் பொருத்தமாக இது செய்யப் படுகிறது.

customized form letters : வாடிக்கையாக்கப்பட்ட வடிவக் கடிதங்கள் : சொல்செயலி மென் பொருள்களில் உருவாக்கப் பட்ட தனிப்பட்டவருக்கேற்ற வடிவக் கடிதங்கள்.

custom software : வாடிக்கை மென் பொருள் : ஒரு வணிகம் அல்லது நிறுவனத்தின் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்ட நிரல்கள் canned software என்பதற்கு மாறானது.

custom view : தனிப்பயன் தோற்றம்.

cut : வெட்டு : ஒரு ஆவணத்திலிருந்து படங்கள் அல்லது உரைப் பகுதிகளை நீக்கும் செயல்.

cut and paste : வெட்டி ஒட்டு : சில வரைகலை மென்பொருள் களிலும், சொல் செயலி மென் பொருள்களிலும் ஒரு இடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் சொற்றொடர் பகுதிகளை நகர்த்தப் பயன்படுத்தும் முறை. வெட்டி ஒட்டும் படிகளுக்கு