பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

366


cybercafe or cyber cafe

366

cyberspace

cybercafe or cyber cafe : மின் வெளி உணவகம் : 1. இணையத் தொடர்புகள் உள்ள கணினி முனையங்களைக் கொண்ட சிற்றுண்டி விடுதிகள். இங்கே காபி, தேநீர் மற்றும் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே இணையத்தில் உலா வரலாம். ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு ரூபாய் எனக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சாப்பிட வருபவர்கள் இணையத்தைப் பார்வையிடவும், இணையத்தில் உலாவ வருபவர்கள் சாப்பிடவும் இங்கே வாய்ப்புக் கிடைக்கிறது. 2. இணையத்தில் இருக்கின்ற ஒரு மெய்நிகர் (virtual) உணவகம். இது பெரும்பாலும் சமூகப்பயன்களுக்கானது. இங்கே கூடுபவர்கள் அரட்டை நிகழ்ச்சி மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வர். அறிக்கைப் பலகை முறை யில் செய்திகளைப் பரிமாறிக் கொள்வர். செய்திக் குழுக்கள் மூலமாக கருத்துகளைப் பரிமாறிக் கொள்வர்.


Cyberdog : சைபர்டாக் : ஆப்பிள் நிறுவனத்தின் இணையப் பயன்பாட்டுக்கான கூட்டுத் தொகுப்பு. இதில் இணைய உலாவி மற்றும் மின்னஞ்சல் இணைக்கப்பட்டுள்ளன. ஒப்பன்டாக் (OpenDoc) என்னும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏனைய பயன்பாடுகளுடன் எளிதாக சேர்த்து இணைத்துச் செயல்படுத்த முடியும்.


cyber law : மின்வெளிச் சட்டம்.

cybernatics : தணனாள்வியல்.

cybernaut : சைபர்நாட் : மின்வெளி வீரர்; மின்வெளியாளி : எப்போதும் தன் வளமான நேரங்களை இணையத்தில் உலா வருவதிலேயே செலவழிப்பவர். இன்டர்நாட்/ இணைய வீரர் என்றும் அழைக்கப்படுவார்.

cybernetic system : தன்னாள்வியல் முறைமை : சுய காணிப்பு மற்றும் சுயக் கட்டுப்பாட்டுத் திறனை அடைய கட்டுப்பாடு மற்றும் திரும்பப் பெறும் பகுதிகளைப் பயன்படுத்தும் அமைப்பு.

cyberphobia : சைபர்போபியா : கணினிகளைக் கண்டு அஞ்சுதல்.

cyberspace : மின்வெளி : நியூரோ மான்சர் என்னும் புதினத்தில் வில்லியம் கிப்சன் உருவாக்கிய சொல் இணையப்