பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data librarian

389

data link layer


data librarian : தரவு நூலர் : தரவு ஆதாரங்களான வட்டுகள், நாடாக்கள் மற்றும் நடைமுறைக் குறிப்புகளை அட்ட வனைப்படுத்தி பொறுப்பாகப் பராமரிப்பவர். அவற்றின் பயன்பாட்டையும் கண்காணிப்பவர். வழக்கமாக நூலகர் அல்லது காப்பாளர் என்று அழைக்கப் படுகிறார்.

data library : தரவு நூலகம் : வட்டு அல்லது அதுபோன்ற சேமிப்புச் சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவு கோப்பு களின் வரையறுக்கப்பட்ட தொகுப்பு தரவு நூலகம் எனப் படுகிறது.

data line : தரவுப் பாதை : ஒரு கணினியினுள் அல்லது செய்தித் தொடர்புப் பாதையினுள் தரவு களைக் கொண்டுசெல்கிற தனித் தனி மின்சுற்று வழி அல்லது பாதை.

data line monitor : தரவுப் பாதைத் திரையகம் : செய்தித் தொடர்புகளில், ஒரு செய்தித் தொடர்புப் பாதையில் குறியீடுகளையும், நேரத்தையும் பகுப்பாய்வு செய்கிற ஒரு வாசகக் கருவி. இது செய்தி அனுப்புவதற்குத் தேவையான மென் பொருள்கள், வன்பொருள்கள் அனைத்தையும் குறிக்கும்.

data link : தரவு இணைப்பு : செய்தி ஒன்றைத் தரவு வடிவில் அனுப்ப அனுமதிக்கும் கருவி.

data link escape : தரவுத் தொடர்புப் போக்கு வழி : அடுத்துவரும் எழுத்து, தரவு இல்லை என்பதையும், ஒரு கட்டுப்பாட்டுக் குறியீடு என்பதையும் குறிக்கின்ற செய்தித் தொடர்புக் கட்டுப்பாட்டு எழுத்து.

data link layer : தரவு தொடுப்பு அடுக்கு : இரண்டு கணினிகளுக்கிடையே நடைபெறும் தரவு பரிமாற்றத்துக்கான வரையறுப்புகள் ஐஎஸ்ஓ குழுவினால் தரப்படுத்தப்பட்டுள்ளன. அது ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ மாதிரியம் (ISO/OS model) என்று அழைக்கப்படுகிறது. தரவு பரிமாற்றத்தில் ஏழு அடுக்குகள் (Layers) வரையறுக்கப்பட்டுள்ளன. அவை ஒஎஸ்ஐ அடுக்குகள் என்று

அழைக்கப்படுகின்றன. அவற்றுள் இரண்டாவது அடுக்கு தரவுத் தொடுப்பு அடுக்கு எனப்படுகிறது. பருநிலை அடுக்குக்கு (Physical Layer) மேலாக அமைந்துள்ளது. இரண்டு சாதனங்களுக்கிடையே உண்மையில் தகவலைப் பரிமாற்றம் செய்கின்ற மூன்று அடுக்குகளுள் (தரவுத் தொடுப்பு, பிணையம் மற்றும்