பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data representation

396

data set label


ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

data representation : தரவு உருவகிப்பு.

data resource management : தரவு ஆதார மேலாண்மை : ஒர் அமைவனத்தின் தரவு ஆதாரங்களை மேலாண்மை செய்யும் பணிகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் தரவு பொறியமைவுகள், தொழில் நுட்பம், நிறுவாகச் சாதனங்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் நடவடிக்கை. தரவுத் தள நிருவாகம், தரவு நிருவாகம், தரவு திட்டமிடல் ஆகியவை இதன் மூன்று முக்கிய அமைப்புகள்.

data scope : தரவு காட்டி : தரவு காட்ச்சித் திரையைக் கண்காணிக்க உதவும் சிறப்பு காட்சியகக் கருவி. அனுப்பப்படும் தரவுகளின் உள்ளடக்கத்தை அது காட்டுகிறது.

data security : தரவு பாதுகாப்பு : தற்செயலாகவோ, வேண்டுமென்றோ தரவுகள் அழிந்து விடாமலும், வெளிப்படுத்துல், திருத்தம் ஆகியவற்றுக்கு ஆட்பட மேலும் பாதுகாத்தல். கணினிப் பாதுகாப்பு, வட்டு நுலகம், பதிவு நாடா நூலகம் ஆகியவற்றையும் காண்க.

data security officer : தர்வுக் காப்பு அலுவலர்.

data segment : தரவுக் கூறு : கணிப்பொறியானது எந்தத் தரவுக் குறிப்புகளின் அடிப்படையில் செயற்படுகிறதோ அந்தத் தரவுகளைச் சேமித்து வைக்கிற கணினி நினைவுப் பகுதி.

data service unit : தரச் சேவை அலகு.

data set : தரவுத் தொகுப்பு : தரவுத் தொகுதி : 1. தாவுத் தொடர்பு வழி ஒன்றின் மூலமாக அனுப்பக் கூடிய வடிவத்துக்கு தரவுகளை அனுப்பும் கருவி. அடுத்த முனையில் அதே போன்ற மற்றொரு கருவி தர்வுகளை அதன் பழைய வடிவத்திற்க்கு மாற்றுகின்றது. அதனால் கணினி அல்லது பிற எந்திரங்களுக்கு அந்தத் தரவுகள் ஏற்புடையவை ஆகின்றன. 2. தொடர்புடைய தரவு வகைகளின் தொகுபபு, குறிப்பாக தொடர்புடைய ஆவணங்களின் தொகுப்பு, கோப்பு எனப்படும்.

data set control block : தரவுத் தொகுதிக் கட்டுப்பாட்டுப் பகுதி : ஒரு வட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு தரவு தொகுதியின்அல்லது தொகுதிகளின் பெயர். சுருக்க விவரிப்பு, அமைவிடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிற பகுதி.