பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

digital display

438

digital micromirror display


digital data transmission : இலக்க முறை தரவு அனுப்புதல் : கணினி சாதனம் உருவாக்கிய மூல மின்னணு சமிக்ஞையை அனுப்புதல். எல்லா வழித் தடங்களும் இலக்கமுறை திறன்கள் உடையவை அல்ல.

digital display : இலக்கமுறைத் திரைக்காட்சி;எண்ணுருத் திரைக் காட்சி : ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிறங்களில் அல்லது சாம்பல் நிறத்தில் மட்டுமே நிகழ்படத் திரைக் காட்சி சாத்தியமாகும் காட்சி முறை. ஐபிஎம் அறிமுகப்படுத்திய ஒருநிறக் (Monochrome) காட்சி, சிஜிஏ (Colour Graphics Array), இஜிஏ (EGA-Enhanced Graphics Array) ஆகியவை இவ்வகை யைச் சேர்ந்தவை.

Digital Equipment Corporation : DEC;டிஜிட்டல் எக்விப்மென்ட் கார்ப்ப ரேஷன்;டிஇசி : சிறு கணினி அமைப்புகளைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் நிறுவனம்.

digital image processing : இலக்கமுறைப் படிமச் செயல் முறை.

digital imaging : இலக்கமுறைப் படிமமாககல.

digital line : இலக்க முறை இணைப்புத் தடம்;எண்ணுரு வழித்தடம் : இருமக் குறியீட்டு வடிவிலான தகவலை மட்டுமே ஏந்திச் செல்லும் தரவு பரிமாற்ற இணைப்புத் தடம். தரவு சிதைவு மற்றும் இரைச்சல் குறுக் கீடுகளைக் குறைப்பதற்கு இலக்கமுறை இணைப்புத் தடத்தில், தரவு சமிக்கைகளை மீட்டுருவாக்கம் செய்யும் திறன் மிகுப்பு நிலையங்கள் (Repeaters) பயன்படுத்தப்படுகின்றன.

digital linear tape : இலக்கமுறை வரிசை நாடா;எண்ணுரு வரிசை முறை நாடா : ஒரு காந்தவகை சேமிப்பு ஊடகம். பாதுகாப்பு நகலெடுக்கப் பயன்படுகிறது. பழைய நாடாத் தொழில்நுட்பங்களைவிட வேகமான தரவு பரிமாற்றம் இயலும்.

digital mail : இலக்கமுறை மின்னஞ்சல்.

digital micromirror display : இலக்கமுறை நுண்ணாடித் திரைக்காட்சி; எண்ணுரு நுண்ணாடித் திரைக்காட்சி : டெக்சஸ் இன்ட்ஸ்ரூமென்ட்ஸ் நிறுவனத்தின் இலக்கமுறை திரைக்காட்சிக் கருவியில் பயன்படுத்தப்படும் மின்சுற்றுத் தொழில்நுட்பம். 0. 002 மி. மீ. க்கும் குறைவான அகலமுள்ள நுண் ஆடிகள் தொகுப்பாக ஒரு சிப்புவில் பொருத்தப்பட்டிருக்கும். இதனைத் திருகி ஒளியைப்