பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

digital multipliear

439

digital plotter


பிரதிபலிக்கச் செய்து திரைக்காட்சி சாதனத்தின் லென்ஸ்மீது விழச் செய்யலாம். இதனால் மிகப் பிரகாசமான முழு வண்ணத் திரைக்காட்சியை உருவாக்க முடியும். l, 920 x 1, 035 (1, 987, 200) படப்புள்ளிகளும் (pixels), 6 கோடியே 40 இலட்சம் நிறங்களும் கொண்ட தெளிவான திரைக்காட்சியை உருவாக்க முடியும்.

digital multipliear : இலக்கமுறை பன்முகப் பெருக்கி.

digital optical recording : இலக்கமுறை ஒளிவப் பதிவாக்கம்.

digital paper : இலக்கக் காகிதம் : அழித்திட முடியாத சேமிப்புப் பொருள். இதனை ICI மின்னணுவியல் நிறுவனம் தயாரித்துள்ளது. இது நாடா மற்றும் வட்டு ஆவணக்காப்பகச் சேமிப்புப் பொருளாகப் பயன் படுகிறது. இது, ஒரு பிரதி பலிப்புப் படுகைப் பூச்சுடைய ஒரு பாலிஸ்டர் படலத்தைப் பயன்படுத்துகிறது. இதன் உச்சியில் அகச்சிவப்பு ஒளிக்குச் செயலுணர்வுடைய சாயப் பாலிமர் படலம் ஒட்டப்பட்டிருக்கும்.

digital PBX : இலக்க அஞ்சல் பெட்டி : ஒரு தனியார் கிளைப் பரி மாற்றமைவு. இது, மனிதர் உதவியில்லாமல், பல்லாயிரம் செய்தித் தொடர்பு வழிகளைத் தானாகவே கையாளக்கூடியது. தொலைபேசி இணைப்புகளில் ஒரே சமயத்தில், குரல் மற்றும் தரவு அனுப்பீடுகள் செய்யலாம். உள்ளுர் தரவுப் மாற்றங்களுக்கு அதிர்வினக்கிகளும், அதிர்விணக்க நீக்கிகளும் (Modems) தேவையில்லை.

digital photography : இலக்கமுறை ஒளிப்படக்கலை;எண்ணுரு ஒளிப் படவியல் : இலக்க முறை (எண்ணுரு) ஒளிப்படக் கருவியைப் பயன் படுத்தும் ஒளிப்படக்கலை. வழக்கமான ஒளிப்படத் தொழில்நுட்பத் திலிருந்து இலக்கமுறை ஒளிப்பட நுட்பம் மாறுபடடது. ஒர் உருப்படத்தைப் பதிவுசெய்ய சில்வர் ஹேலைடு தடவிய ஃபிலிம் இலக்கமுறை ஒளிப் படக் கருவியில் பயன்படுத்தப் படுவதில்லை. அதற்குப் பதிலாக, இலக்கமுறைப் படக்கருவி உருவப்படங்களை மின்னணு முறையில் பதிவு செய்கிறது.

digital plotter : இலக்கமுறை வரைவி : வரைபடமுறைகள், வரி ஒவியங்கள் மற்றும் பிற படங்களை வரைவதற்கு மைபேனா அல்லது பேனாக்களைப் பயன்படுத்தும் வெளியீட்டுச் சாதனம்.