உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

AOK

43

acoustic coupler


நோக்கிலான வரைவியல் மாதிரி கருவிகளை உருவாக்கும் தொகுதியாகும். முப்பரிமாணப் பயன்பாடுகளில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட வரைவியல் எந்திரம் (geometry engine).

ACK : ஏசிகே : ஏற்பு அறிவிப்பு : Acknowledgeஎன்பதன் பெயர். தகவல் தொகுப்பு ஒன்று பெறப்பட்டுள்ளது என்பதை, அதனை அனுப்பிய முனையத்துக்கு, பெற்ற முனையம் திருப்பி அனுப்புவது. இதற்கு எதிர்மறையான குறும் பெயர் என். ஏ. கே (NAK).


acknowledge : ஏற்பு ஒப்பு : ஒரு பணி முடிந்துவிட்டது என்பதையும், அடுத்த பணிக்கு வன்பொருள் தயார் என்பதையும் குறிப்பிடும் உள்ளிட்டு/வெளியீட்டு சமிக்கை.

acknowledge character : ஏற்பு ஒப்பு எழுத்து  : அனுப்பப்பட்ட தகவல் சரியாகப் பெறப்பட்டது என்பதைக் குறிப்பிடும் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு எழுத்து.

acknowledgement : ஏற்பு ஒப்பம் : தகவல் பெறும் சாதனத்திலிருந்து அனுப்பும் சாதனத்திற்கு ஏற்பு ஒப்ப எழுத்தை அனுப்புதல்.

A C M ஏசிஎம் : கணினி எந்திரங்களுக்கான சங்கம்

Association for Computing Machinery என்பதன் குறும்பெயர். கணினி வல்லுநர்களுக்களுக்கான தொழில் திறனையும் தகுதியையும் வளர்க்கப் பாடு படும் உலகின் மிகப் பெரிய மற்றும் அறிவியல் சங்கம். 1947இல் உருவாக்கபட்டது. அவ்வப்போது மாணவர்கள் கல்வியாளர்கள் தொழில்செய்வோர் இடையே நடைபெறும் விவாதங்களைக் கொண்ட மதிப்புமிக்க இதழ் களை வெளியிட்டும் எண்ணற்ற கருத்தரங்குகளை நடத்தியும் தொழில் நுட்பத் திறனுக்காகப் புகழ் பெற்றது.

ACMST : ஏசியம்எஸ்டி : Association for Computers in Mathematics and Science Teachin என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணிதம் மற்றும் அறிவியல் கல்வியில் கணினிகள் சங்கம். இது கல்வியில் கணினியைப் பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ள கல்லூரி மற்றும் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான தொழில் முறை அமைப்பு.

acoustic coupler ஒலிப்பிணைப்பி; ஒலி இணைப்புச்சாதனம் . ரப்பர் கோப்பைகள் வழியாக தொலைபேசியின் பகுதியுடன்

கைக்கொள்