பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acoustic delay line

44

Acrobat


இணைக்கப்படும் மோடெம். இது கணினி தரும் சமிக்கைகளை தொலைபேசியின் வாய் பேசி உரைக் கூடிய ஒசையாக மாற்றுகிறது. தொலைபேசி ஒசைகளை கணினி படிக்கக் கூடிய மின்சார சமிக்கைகளாக மாற்றுகிறது. இவை ஒலி மோடெம் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை எந்த வகை தொலைபேசியுடனும் இணையக் கூடியவை. நேரடி இணைப்பு மோடெம்களை ஒரு தொலைபேசி அமைப்புடன் இணைக்கத் தொகுப்பியல் தொலைபேசி இணைப்புத் தேவை. ஒரு விநாடிக்கு 1, 200 துண்மி (பிட் ) என்பது இதன் தகவல் பரிமாற்ற வேகம்

acoustic delay line : ஒலி அடிப்படையின் தாமதத் தடம்.

acoustic memory : ஒலி நினைவகம் : தொடர்ச்சியாக ஒரு சமிக் கையை மீண்டும் மீண்டும் உரு வாக்குவதன் மூலம் தகவலைச் சேமிக்கும் இடம்.

acoustic modem : ஒலி இணக்கி; ஒலி மோடெம் : இரும ஒலி அலை வரிசைகளாக மாற்றுவதன்மூலம் தகவல்களை அனுப்பிப் பெறுகிறது


acoustic sound enclosure

ஒலித் தடுப்பு உறை  : ஒர் அச்சுப்பொறி அல்லது பிற எந்திரங் களில் பொருத்தி ஒசையை மட்டுப்படுத்தும் சாதனம்.

ACPA : ஏசிபிஏ : கணினி நிரலர் மற்றும் பகுப்பாய்வாளர் சங்கம் Association of Computer Programmer and Analysis என்பதன் குறும்பெயர். தொழிலில் ஈடுபட்டிருப்போது பன்னாட்டுச் சங்கம். தொழில் துணுக்கப் பிரச்சினைகளில் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு இடமளிக்கிறது. மற்றும் தொழில்துணுக்கத் திறனை வளர்த்துக் கொள்ள கருத்தரங்குகள், கருத்துப் பட்டறைகள், மாநாடுகள் மூலம் வாய்ப்பளிக்கிறது. தேசிய அளவிலும் வட்டார அளவிலும் தகவல்கள் நிறைந்த துறைசார் வெளியீடுகளை வழங்குகிறது. மற்ற சேர்ந்த தொழில்நுணுக்கத்திறனாளருடன் கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது.

Arcobat : அக்ரோபேட்  :

அடோப் நிறுவனம் உருவாக்கி யுள்ள ஒரு வணிக மென் பொருள். டாஸ் விண்டோஸ்,

மெக்கின்டோஷ், யூனிக்ஸ் பணித்தளங்களில் உருவாக்கப் பட்ட, முழுதும் வடிவமைக்கப் பட்ட ஆவணங்களை பிடிஎஃப் (PDF - Portable Document Format)