பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

disk emulator

456

disk interface


வட்டுக்கு மாற்றும் செயல் முறை.

disk emulator:வட்டு உரு மாதிரி:ஒரு வட்டு இயக்கியின் திண்மநிலை உருப்படிவாக்கம். இது, மைய முறைகளுக்கும், முனையங்களுக்கும் பெரும் பாலும் பயன்படுத்தப்படுகிறது.

disk envelope:வட்டு உறை:செருகு வட்டுகளை கையாளும் போதும் சேமித்து வைக்கும் போதும் பயன்படுத்தும் காகித உறை. வட்டு இயக்கியில் வட்டை துழைப்பதற்குமுன் வெளியே எடுக்கப்பட வேண்டும்.

diskette:டிஸ்கெட்:செருகு வட்டு:நுண் கணினிகள்,சிறு கணினிகளுக்கான குறைந்த விலை,அதிக சேமிப்பு தரும் சாதனம்.

diskette tray:டிஸ்கெட் தட்டு:செருகு வட்டுகளைச் சேமிக்கப் பயன்படும் கொள்ளகம். திறந்தோ மூடியோ இருக்கலாம்.

disk failure:வட்டுச் செயலறவு:ஒரு நிலைவட்டு அல்லது செருகுவட்டு இயக்கி அல்லது வட்டுங்கூடச் செயலற்றுப் போதல். இவை, மின் எந்திரச் சாதனங்கள் என்பதால்,வட்டுகள்,வட்டு இயக்கிகள் அனைத்தும் இறுதியில் செயலிழந்து போவது இயற்கையே. ஒரு நிலை வட்டின் சராசரிச் செயலறவு நேர்வு 20,000 மணிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

disk file:வட்டுக் கோப்பு:காந்த வட்டில் தங்கி இருக்கும் கோப்பு. ஒரு வட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கு படுத்தப்பட்ட தரவுத் தொகுதி.

disk format:வட்டின் உருவமைவு:ஒரு சேமிப்புச் சாதனத்தில் தடங்கள் மின்னியல் முறையில் அச்சிடப்படும் முறை குறித்த தரவு. ஒரு வட்டின் உருவமைவு,அதன் இயல்பான ஊடகம்,உருவமைவுச் செயல் முறை மூலம் தீர்மானிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு: 5.25' 360 KB செருகு வட்டு(எ) 8.89 செ.மீ. 1.4 MB செருகுவட்டு.

disk,hard:நிலைவட்டு.

disk interface:வட்டு இடைமுகம்: 1.வட்டகத்தை(disk drive) கணினியுடன் இணைக்கப் பயன்படும் இடையிணைப்பு மின்சுற்று அமைப்பு. 2. வட்டகங்களைக் கணினியுடன் இணைப்பதற்கென உருவாக்கப்பட்ட தர வரையறை. எடுத்துக்காட்டாக,எஸ்டீ 506 (ST 506) என்பது,நிலை வட்டுகளை கணினியுடன் இணைக்கப் பின்பற்றப்படும் வட்டு இடைமுகத் தர வரையறை ஆகும்.