பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

disk pack

458

disk/track info


செயல் முறை. இது, சிதறலைக் குறைக்கும் வகையில் கோப்புகளைப் படியெடுக்கிறது. வட்டுப் பரப்புகளை மறு ஒதுக்கீடு செய்கிறது.

disk pack : வட்டு அடுக்கு : ஒரே அலகாகக் கருதப்பட்டு ஒரு கம்பியில் ஏற்றப்படும் நிலை வட்டுகளின் வெளியே எடுக்கக்கூடிய தொகுதி.

disk partition : வட்டுப் பிரிவினை : வட்டில் உள்ள தரவுகளை சிறு பகுதிகளாகப் பிரித்து எளிதாகக் கையாள உதவும் அளவைப் பகுதி.

disk sector : வட்டுப் பிரிவு : வட்டின் மேல் தொடர்ச்சியான இரண்டு ஆரங்களுக்கு இடையிலுள்ள தரவுச் சேமிப்பு இடப் பகுதியைக் குறிப்பிடுகிறது. ஒரு பட்டாணியைத் துண்டு போடுவது போன்ற முறையிலேயே வட்டின் பிரிவுகளை அமைக்க முடியும்.

disk server : வட்டு வழங்கன்;வட்டு வழங்கன் கணினி : ஒரு குறும் பரப்புப் பிணையத்தில், பயனாளர்கள் பகிர்ந்து கொள்வதற்கான வட்டினைக் கொண்ட ஒரு கணுக் கணினி. இது கோப்புப் வழங்கனிலிருந்து (Fie Server) மாறுபட்டது. கோப்பு வழங்கன் பயனாளர்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை ஏற்றுக் கோப்புகளை வழங்கும். மிகவும் நுட்பமான மேலாண்மைப் பணிகளையும் மேற்கொள்ளும். ஆனால் வட்டு வழங்கன் மேலாண்மைப் பணி எதுவும் செய்வதில்லை. வெறுமனே ஒரு தரவு சேமிப்பகமாகச் செயல்படும். பயனாளர்கள் வட்டு வழங்கனிலுள்ள கோப்பு களைப் படிக்கலாம்/எழுதலாம். வட்டு வழங்கனிலுள்ள வட்டினைப் பல்வேறு தொகுதி (Volume) களாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு தொகுதியும் ஒரு தனிவட்டுப் போலவே செயல்படும்.

disk space : வட்டுப் பரப்பு : ஒரு வட்டில் காலியான இடப்பரப்பினைத் தெரிவிக்கின்ற ஒரு செய்திக் குறிப்பு ஆதாரச் செயற்பணி.

disk storage : வட்டுச் சேமிப்பகம்.

disk striping : வட்டுச்செய்தி இடையிணைப்பு : பன்முகவட்டு இயக்கிகளுக்கு தரவுகளைப் பரவச்செய்தல். இயக்கிகளின் ஊடே எண்மிகள் அல்லது வட்டக்கூறுகள் மூலம் தரவுகள் இடையிணைப்பு செய்யப்படுகின்றன.

disk/track info : வட்டு/தடத்தரவு.