பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

distributed network

465

disturbance


distributed network : பகிர்மான இணையம்;பகிர்மான கட்டமைப்பு : இடைப்பட்ட முனைகளின் வழியாக நேரடியாகவோ அல்லது மிதமிஞ்சிய பாதைகளின் வழியாகவோ எல்லா முனை இணைகளும் இணைக்கப் பட்டுள்ள கட்டமைப்புத் தொகுதி.

distributed processing : பகிர்ந்தமை செயலாக்கம் : ஒரு தரவு தொடர்புப் பிணையத்தில் பிணைக்கப்பட்ட தனித்தனிக் கணினிகளால் நிறைவேற்றப் படும் தரவு செயலாக்கத்தின் ஒரு வடிவம். பகிர்ந்தமை செயலாக்கம் பொதுவாக இரண்டு வகைப்படும். 1. சாதாரண பகிர்ந்தமை செயலாக்கம். 2. உண்மையான தரவு செயலாக்கம். சாதாரணத் தரவு செயலாக்கத்தில், பணிச்சுமையானது, தமக்குள்ளே தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளமுடிகிற கணினிகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. உண்மையான பகிர்ந்தமை செயலாக்கத்தில், பல்வேறு பணிகள் ஒவ்வொரு கணினியும் ஒவ்வொரு பணியை நிறைவேற்றும் வகையில் பணிச்சுமை பகிர்ந்தளிக்கப் படுகிறது. பணிகளின் ஒட்டு மொத்தப் பங்களிப்பு ஒரு பெரும் குறியிலக்கை அடைய வழி வகுக்கும்.

distributed processing system : பகிர்ந்தமைத் தரவு செயலாக்க முறைமை.

distributed transaction processing : பகிர்ந்தமை பரிமாற்றச் செயலாக்கம் : ஒரு பிணையத்தின் வழியாக தரவு பரிமாற்றம் செய்துகொள்ளும் கணினிகள், பரிமாற்றச் செயலாக்கப் பணிகளை தமக்குள்ளே பகிர்ந்து கொள்ளும் முறை.

distribution list : பகிர்மானப் பட்டியல்;வினியோகப் பட்டியல் : ஒரு மின்னஞ்சல் குழு (mailing list) உறுப்பினர்களின் முகவரிப் பட்டியல். இது லிஸ்ட்செர்வ் (Listserv) போன்ற ஒரு அஞ்சல் குழு மென்பொருளாகவோ, ஒரு மின்னஞ்சலைப் பெறுகின்ற அனைவருடைய முகவரிகளுக்கும் சேர்த்த ஒரு மாற்றுப் பெயராகவோ இருக்கலாம்.

distributive nature : பகிர்வுத்தன்மை;பகிர்ந்தளிக்கும் இயல்பு.

distributive sort : பகிர்மானப் பிரிவு : ஒரு பட்டியலை பல பகுதிகளாகப் பிரித்து மீண்டும் வரிசையாக அடுக்குவதனால் உருவாக்கப்படும் பிரிப்புமுறை.

disturbance : தடங்கல் : ஒரு சமிக்கையை அனுப்பும்போது அறிவு பரிமாற்றலில் எப்போதாவது ஏற்படும் குறுக்கீடு.