பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dope vector

475

dot


dope vector : ஒட்டுச் சரம் : இணைப்புப் பட்டியலில் உள்ள ஒரு அணு, அந்தப் பட்டியலில் உள்ள பிற அணுக்களின் உள்ளடக்கங்களைக் கூறும் ஒரு அளவுச் சரம் (வெக்டார்).

doping : ஒட்டல்;மாசு ஊட்டல் : அரைக்கடத்தியை உருவாக்கும் போது தூய சிலிக்கானின் படிக அமைப்பில் துய்மையற்ற பொருள்களைச் சேர்க்கும் செயல்முறை.

doping vector : மாசு நெறியம்;மாசு திசையம்.

DOS : டாஸ் : Disk Operating System என்பதன் குறும்பெயர். இது வட்டு இயக்க அமைப்பு ஆகும். வட்டத் தகட்டுச் செயற்பாட்டு முறை அல்லது வட்டுச் செயற்பாட்டு பொறியமைவுமாகும். பயன்படுத்துவோருக்கும் கணினியின் வட்டு இயக்கத்துக்கும் இடையில் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளும் இணைப்பை ஏற்படுத்தும் வட்டு சார்ந்த ஒரு சிறப்பு நிரலாக்கத் தொடர்.

DOS box : டாஸ் பெட்டி : ஒஎஸ்/2 இயக்க முறைமையில், எம்எஸ்-டாஸ் நிரல்களை இயக்குவதற்குத் துணைபுரியும் ஒரு செயலாக்கம்.

DOS extender : டாஸ் நீட்டிப்பான் : டாஸ் இயக்க முறைமையில் டாஸ் பயன்பாட்டு நிரல்கள் பயன்படுத்திக்கொள்ள, 640 கேபி மரபு நினைவகத்தை நீட்டிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிரல். ஒளிக் காட்சி தகவி, ரோம் பயாஸ், உ/வெ துறைகள் போன்ற கணினி உறுப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட நினைவகத்தை டாஸ் நீட்டிப்பான் பயன்படுத்திக் கொள்ளும்.

DOS prompt : டாஸ் தூண்டி : எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில், பயனாளரின் கட்டளையை ஏற்கத் தயாராக இருக்கும் நிலையை உணர்த்தும் அடையாளச் சின்னம். டாஸின் கட்டளைச் செயலி இதனை வழங்குகிறது. பெரும்பாலும் இச்சின்னம் இருப்பு வட்டகம்/கோப்பகத்தைச் சுட்டுவதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, A\>, C\>. D.\DBASE> என்பது போல இருக்கும். பயனாளர், தன் விருப்பப்படி இச்சின்னத்தை மாற்றி அமைத்துக் கொள்ளவும் முடியும். Prompt என்ற கட்டளை அதற்குப் பயன் படுகிறது.

dot : டாட்;புள்ளி : 1. யூனிக்ஸ், எம்எஸ்-டாஸ், ஒஎஸ்/2 போன்ற இயக்க முறைமைகளில் கோப்பின் முதற்பெயரையும், வகைப்பெயரையும்