பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ActiveX documents

48

actuatorசெயலுறுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். சி, சி++, விசுவல் பேசிக், விசுவல் சி++ போன்ற மொழிகளில் ஆக்டின்எக்ஸ் செயலுறுப்பு களை உருவாக்க முடியும்.

ActiveX documents : ஆக்டிவ் எக்ஸ் ஆவணங்கள்.

activity : நடவடிக்கை;செயற்பாடு : பணியின் பகுதிகளில் ஒரு நடவடிக்கை.

activity rate : செயற்பாட்டு வீதம்.

activity ratio : செயல்பாட்டு விகிதம் : கோப்பு ஒன்று கையாளப்படும்பொழுது நடவடிக்கைகளுக்கு ஆட்படும் ஆவணங்களுக்கும் கோப்பில் உள்ள ஆவணங்களுக்கும் இடையிலான விகிதம்.

ΑCΤΟR : ஆக்டர் : ஒயிட் வாட்டர் குரூப் நிறுவனத்தினர் உருவாக்கிய, பொருள் நோக்கிலான நிரலாக்க மொழி. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் நிரலாக்கத்திற்கு உதவும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட மொழி.

actual argument : தரு மதிப்பு : ஒரு செயல்கூறு, செயல்முறை அல்லது துணைநிரல் கூறினை (Function, Procedure of subroutines அழைக்கும் கட்டளையில், அவபுருக்களுக்கு (para meters) இயைந்த வகையில் அனுப்பி வைக்கப்படும் தரு மதிப்புகள்.

actual decimal point : உண்மை பதின்மப் புள்ளி : ஓர் உள்வீட்டுத் தரவுப் பொருளில் சேர்க்கப்படும் உண்மையாக இடம் பெறும் பதின்மப் புள்ளி.

actuate : உந்திவிடு.

actuator : செயல் ஊக்கி : காந்த வட்டில் விருப்பப்படும் இடத்துக்கு படித்தல், எழுதுதல்,


செயல் ஊக்கி தொகுப்பி

செயல் ஊக்கி