பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

DUA

490

dual processor


DUA : டியூஏ : கோப்பகப் பயனாளர் முகவர் என்று பொருள்படும் Directory User Agent என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது ஓர் எக்ஸ். 500 கிளையன் நிரல். இது, பிணை யத்திலுள்ள ஒரு பயனாளரின் முகவரியைத் தேடித் தருமாறு டிஎஸ்ஏ-வுக்குக் கோரிக்கை அனுப்பும்.

dual boot : இரட்டைச் செயல்பாடு : இரு மாறுபட்ட செயற்பாட்டுப் பொறியமைவுகளில் ஏதாவதொன்றுடன் தொடங்கப் படக்கூடிய கணினி.

dual channel controller : இரட்டை தடக்கட்டுப் பாட்டுப் பொறி : ஒரே நேரத்தில் ஒரு சாதனத் தில் இருந்து படித்தல், எழுதுதல் ஆகிய இரண்டை யும் இயங்கச் செய்யும் கட்டுப்பாட்டுப் பொறி.

dual density : இரட்டை அடர்த்தி : 1. அடர்த்தி யாக தரவுகளைப் பதிவு செய்ய உதவும் காட்சி வட்டின் நாடாக்களைக் குறிப்பிடுகிறது. 2. இரு புறமும், பதியக்கூடிய திறனுள்ள வட்டுத் (ஃபிளாப்பி) தட்டு.

dual disk drive : இரட்டை வட்டு இயக்ககம் : ஒரு கணினியிலுள்ள இரண்டு நெகிழ்வட்டு இயக்ககங்களைக் குறிக்கிறது.

dual in line package : DIP : இரட்டை வரிசைப் படிப்பொதிவுகள் : சிப்பு ஏற்றப்பட்டிருக்கும் புகழ் பெற்ற ஒருங்கிணைந்த மின்சுற்றுவகை. சிப்புவை மின்சுற்று அட்டையில் சொருகுவதற்கு வேண்டிய பின் இணைப்புகளையும் ஒருங்கிணைந்த மின் சுற்றுக்கான பாதுகாப்புக் கவசம்.

dual intensity : இரட்டைத் திறன் : வழக்க மான அல்லது தடித்த எழுத்துகளில் எழுத்துகளை வெளியிடும் திறனுள்ள அச்சுப்பொறிகள் அல்லது முனையங்கள்.

dual port memory : இருதிற நினைவுப் பதிப்பி : இரு மாறுபட்ட வழிகளில் ஒரே சமயத்தில் அணுகக்கூடிய நினைவுப் பதிப்பி,

dual processing : இரட்டைச் செயலகம் : ஒரு கணினி அமைப்புக்குள் இருந்து கொண்டு ஒரே நேரத்தில் வேலை செய்யும் திறனுடைய இரண்டு மையச் செயலக அலகுகள். இரண்டு நுண் செயல கங்களும் ஒரே நுண்கணினியில் இருந்துகொண்டு இரண்டு சிப்புகளிலுமே செயல்படுமாறு வடிவமைக் கப்பட்ட மென்பொருள்.

dual processor : இரட்டைச் செயலி;இரட்டைச் செய்முறைப்படுத்தி.