பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

E

501

easy colour paint




E

E : இ : மிதக்கும் புள்ளி. எண் முறையில் மடங்கு என்பதைக் குறிக்கும் குறியீடு. 17-E2 என்றால் 17-ன் அடுக்கு 2 என்பதைக் குறிக்கும்.

EAM : இஏஎம் : மின்னணுக் கணிதப் பதிவுக் கருவி : Electronic Accounting Machine என்பதன் குறும்பெயர். வழக்கமாக அலகு பதிவுக் கருவியைக் குறிக்கும்.

early binding : தொடக்கக் கட்டுமானம் : தொகுப்பு நிலையில் அச்செழுத்துருக்களைக் குறித்தளித்தல்.

EAROM : இஏரோம் : மின்னோட்டத்தால் மாற்றத்தக்க படிப்பு நினைவகம் : Electrically Alterable Read Only Memory என்பதன் குறும்பெயர். சேமிக்கப்பட்ட தரவுகளை அழிக்கத் தேவையில்லாமல் குறிப்பிட்டவற்றை மட்டும் மாற்றுகின்ற, படிக்கமட்டுமான (ரோம்) நினைவகம். அழிக்கத்தக்க செயல்முறையிலான, படிப்பதற்கான நினைவுப் பதிப்பி (EPROM) சாதனத்தில் எல்லாவற்றையும் அழித்துத்தான் புதியவற்றைச் சேர்க்க வேண்டும்.

earth : தரையிணைப்பு.

earth station : தரை நிலையம் : செயற்கைக்கோள் செய்தித் தொடர்புகளுக்கான அனுப்பீட்டு/ஏற்பு நிலையம். இது, நுண்ணலை அனுப்பீட்டுக்காக ஒரு கிண்ண வடிவ வானலை வாங்கியைப் பயன்படுத்துகிறது.

easter egg : ஈஸ்டர் முட்டை : ஒரு கணினி நிரலில் மறைந்து கிடக்கும் பண்புக்கூறு. மறைந்து கிடக்கும் ஒரு கட்டளையாக இருக்கலாம். நகைச்சுவையான செய்தியாக இருக்கலாம். ஒர் அசைவூட்டமாக இருக்கலாம். அந்த மென்பொருளை உருவாக்கியவர்களின் பட்டியலாக இருக்கலாம். ஈஸ்டர் முட்டையை உடைத்துப் பார்க்க, பயனாளர் பெரும்பாலும் தெளிவற்ற வரிசையில் பல விசைகளை அழுத்த வேண்டியிருக்கும்.

easy colour paint : எளிய வண்ண மை : தொழில்முறை சாராதவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட"ஆப்பிள் மெக்கின்டோஷ்" வரைகலைச் செயல்முறை. பயன்படுத்துபவர் ஒரு வண்ணத்தையும், தோரணியை