பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

em space

528

EN


இஎம்எஸ் என்பது எல்லையைத் தாண்டி கூடுதல் நினைவகத்தை அணுக ஏதுவாக கூடுதலான 16 கேபி நினைவகச் சிப்புகள் பொருத்தப்பட்டு மென்பொருள் மூலம் அவற்றை அணுக வழி செய்யப்பட்டிருந்தன. இன் டெலின் பிந்தைய பதிப்புகளில் இஎம்எஸ் என்பது இஎம்எம் 386 (எம்எஸ் டாஸ் 5. 0) என்பது போன்று மென் பொருள் நினைவக மேலாளர்களாக இருந்தன. இப்போதைய கணினிகளில் 1. எம்பி என்கிற வரம்பு இல்லை. 80386 மற்றும் செயலிகளில் செயல்படும் கணினிகளில், பாதுகாக்கப்பட்ட முறையில் பழைய பயன்பாடுகளை இயக்க இஎம்எஸ் பயன்படுகிறது.

em space : எம் இடைவெளி : ஒரு தட்டச்சு அளவீட்டு அலகு. ஒரு குறிப்பிட்ட எழுத்துருவின் உருவளவைக் குறிப்பதாக இருக்கும். பெரும் பாலான எழுத்துருக்களில் இந்த இடவெளி பெரிய M எழுத்தின் அகலத்துக்கு சமமாகும். இதனாலேயே இப்பெயர் ஏற்பட்டது.

emutate : போலச்செய் : 1. மின்னணு இணைப்பின் மூலம் ஒரு வன்பொருள் அமைப் பைப் போல இன்னொன்று செயல்படுத்தல். இதில் போலச் செய்யும் அமைப்பு அதே தகவல்களை ஏற்றுக்கொண்டு அதே நிரலாக்கத் தொடர்களைச் செயல்படுத்தி மூல அமைப்பில் கிடைத்தது போன்ற அதே முடிவுகளையே கொண்டு வரும். 2. மற்றொரு மென்பொருள் அல்லது வன்பொருள் செயலைப் போலச் செய்யும் நிரலாக்கத் தொடர் அமைத்தல்.

emulation : போன்மம்;போலச் செய்தல்.

emulation mode : முன்மாதிரி முறை : போன்ம முறை : ஒரு கணினி ஓர் அயல் செயல்முறையை முன்மாதிரியாக இயக்கும்போது ஏற்படும் செயற்பாட்டு நிலை.

emulator : பின்தொடர்பவர்;போன்மி : ஒரு வகையான கணினி அமைப்புக்காக எழுதப்பட்ட நிரலாக்கத்தொடர் வேறு ஒரு வகையான கணினியில் செயல்பட அனுமதிக்கும் சாதனம் அல்லது நிரலாக்கத்தொடர்.

emulsion laser storage : எமுல்சன் லேசர் சேமிப்பு : ஃபிலிமில் லேசர் கற்றை மூலம் சூடாக்கித் தகவலைப் பதியும் முறை.

EN : என் : அச்செழுத்துருக் கலையில், 'எம்' என்ற எழுத்தின் அகலத்தில் பாதியளவுக்குச் சமமான ஓர் அலகு. ஓர் 'என்'