பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

engine

534

enhanced keyboard


பிட்ட நேரம்வரை பயன் படுத்தப்படாவிட்டால் குறைந்த மின்சாரத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு உறக்க நிலைக்கு மாறிவிடும். இது போன்ற கணினி, பசுமைக்கணினி (Green PC) என்று அழைக்கப்படுகின்றது. ஆற்றல் நட்சத்திர ஒட்டிகளை (Stickers) கொண்டிருக்கும்.

engine : எந்திரம் : ஒரு தரவு ஆதாரத்தைச் செயற்படுத்துகிற ஒர் ஊர்தியின் இயக்குவிசையாக விளங்கும் ஒரு செய்முறைப் படுத்தியின் மற்றொரு பெயர். வரைகலைச் செய்முறைப் படுத்தி போன்ற தனிவகைச் செய்முறைப்படுத்தி. எடுத்துக் காட்டு : தரவுத் தள எந்திரம். வரைகலை எந்திரம். செய்முறைப் படுத்தியின் கொச்சை வழக்கு.

engineering workstation : பொறியியல் பணிநிலையம்.

engineering units : பொறியியல் அலகுகள் : மாறிலி செயல்முறைக்குப் பயன்படுத்தப்படும் அளவைமுறை அலகுகள்.

enhanced graphics adapter (EGA) : மேம்பட்ட வரைகலை ஏற்பி;மேம்பட்ட வரைவியல் தகவி.

enhanced graphics display : மேம்பட்ட வரைகலைக் காட்சி.

Enhanced Integrated Drive Electronics EIDE : மேம்பட்ட ஒருங்கிணை இயக்க மின்னணுவியல் (இஐடிஇ) : ஒரு வட்டினை இயக்கக்கூடிய கட்டுப்பாடு மின்சுற்றுகள் உள்ளிணைக்கப்பட்ட வட்டு இயக்க வடி வமைப்பான ஐடிஇ தரமுறையின் விரிவாக்கமே இஐடிஇ. இவை, முறைமைப் பாட்டையில் (system bus) தரப்பட்ட இடை முகங்களை இணைக்க உதவுகின்றன. முன்னில்லாத வெடிப்புத் தரவு பரிமாற்றம்- நேரடித் தரவுஅணுக்கம் போன்ற கூடுதல் சிறப்புக் கூறுகள் உள்ளன. அது மட்டுமின்றி இஐடிஇ இலக்கம் 8. 4 கிகாபைட்டுகள் வரை ஏற்கும். (ஐடிஇயில் 528 மெகா பைட்டு வரைதான்). ஏடீஏ-2 இடைமுகப்பை ஏற்கும். வினாடிக்கு 13. 3 எம்பி தரவு பரிமாற்றம் சாத்தியம் (ஐடிஇ யில் 3. 3 எம்பி தான்). ஸ்கஸ்ஸி (SCSI) இயக்கங்கள் அளவுக்குத் திறனுடையது. ஆனால் அவற்றைவிட விலை மலிவானது.

enhanced keyboard : உயர்த்திய விசைப்பலகை : 101 விரற்விசைகள் உள்ள IBM விசைப்பலகை. இது, PC, AT விசைப்பலகைக்கு பதிலாக உருவாக்கப்

பட்டது. இதில் முதலிலிருந்து எண்