பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

entarge

536

enternal sort


lator என்பதன் குறும்பெயர். முழுவதும் மின்னணு மயமான முதல் பேரளவு கணினி. 1946இல் பென்சில்வேனியாவில் ஜான் மாக்லியும் ப்ரெஸ்பர் எக்கர்டும் உருவாக்கியது. 15, 000 சதுர அடி அகலமாகவும், 30 டன் எடையுடனும், 18, 000 வெற்றிடக்குழாய்களுடனும் இருந்த இதற்கு 130 கிலோ வாட் மின்சாரம் தேவைப்பட்டது. ஈனியாக் ஒரு நொடிக்கு 5, 000 கட்டளைகளைச் செய்தது. தானியங்கி கணினி வளர்ச்சியில் முன்னோடி யாகக் கருதப்பட்ட ஈனியாக் 9 ஆண்டு இயக்கத்துக்குப்பின் 1955இல் ஒய்வு பெற்றது.

enlarge : பெரிதாக்கு : மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் ஏனைய வரைகலைப் பணித் தளங்களில் ஒரு சாளரத்தின் உருவளவைப் பெரிதாக்குதல்.

enlarge font : பெரிதாக்கிய எழுத்துரு;பெரிய எழுத்துரு.

E notation : E எண்முறை : மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய எண்களைக் குறிக்கப் பயன் படுத்தப்படும் எண்முறை. ஒரு மான்டிசா மற்றும் மடங் காக்கல் ஆகிய இரண்டு பகுதிகள்கொண்டது.

enquiry : விசாரணை.

enquiry character : விசார்ணை எழுத்து : செய்தித்தொடர்புகளில் உள்ள ஒரு கட்டுப்பாட்டு எழுத்து. இது ஏற்பு நிலையத்திலிருந்து ஒரு பதிலை வேண்டுகிறது.

en space : என்-இடவெளி : ஒரு குறிப்பிட்ட எழுத்துருவில் பாயின்ட் அளவில் பாதி அகலம் கொண்ட ஒர் அளவீட்டு அலகு.

ensure capacity : கொள்திறன் உறுதி செய்.

enter : நுழை பதவி;உள்ளிடு.

enter key : நுழைவு விசை;நிரைவேற்று விசை;முடிப்பு : விசைப் பலகையில் இருக்கும் மிக முக்கியமான விசை. கணினிக்கு ஒரு கட்டளையைத் தந்து அதனை நிறைவேற்றச் செய்ய இந்த விசையைத்தான் அழுத்த வேண்டும். உரையைத் தட்டச்சு செய்து ஒரு வரியை முடித்து வைக்க இந்த விசையைத் தட்ட வேண்டும். சொல் செயலி நிரல்களில் ஒரு பத்தியை முடித்த பிறகு இவ்விசையை அழுத்த வேண்டும்.

enternal sort : புறநிலைப் பகுப்பி : குழுமம் முழுவதும் மிகப்பெரிதாக இருக்கும்போது, பகுக்கப்பட்ட இனங்களின் இடைநிலைக் குழுமங்களைச் சேமித்துவைக்கப் பயன்படுத்தப்