பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

event-driven programming

549

exception reporting


event-driven programming : நிகழ்வுத் தூண்டல் நிரலாக்கம்;நிகழ்வு முடுக்க நிரலாக்கம் : விசையை அழுத்துதல், சுட்டியைச் சொடுக்குதல் போன்ற நிகழ்வுகளின்போது செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு நிரலாக்கம் செய்யும் முறை. முதன்முதலாக ஆப்பிள் மெக்கின்டோஷில் நிகழ்வு முடுக்க நிரல்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. ஆனால் இப்போது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ், யூனிக்ஸில் எக்ஸ்விண்டோஸ் போன்ற அனைத்து வரைகலைப் பணித்தளங்களிலும் நிகழ்வு முடுக்க நிரலாக்கமே பின்பற்றப்படுகிறது.

evolutionary refinement : படிமலர்ச்சிச் செம்மையாக்கம்.

exa : எக்ஸா;இஎக்ஸ்ஏ : ஒரு குவின்டில்லியனை (1018) குறிக்கும் முன்னொட்டுச் சொல். கணினிச் செயல்பாட்டில் (இரும எண் முறையில் அமைந்த), எக்ஸா என்னும் சொல் 1, 152, 921, 504, 606, 846, 976 என்ற மதிப்பைக் குறிக்கிறது. இது 260 ஆகும். ஏறத்தாழ ஒரு குவின் டில்லியனுக்குச் சமம்.

excel : எக்செல் : 'மைக்ரோ சாஃப்ட் கார்ப்பரேஷன்'என்ற அமைவனம் உருவாக்கிய மின்னணு விரிதாள் மென்பொருள். இது IBM PC மெக்கின் டோஷ் கணினி இரண்டுக்கும் உரியது.

exception : விதிவிலக்கு : இயக்க நேரப்பிழை : ஒரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும்போது ஏதேனும் பிழையிருப்பின் நுண்செயலி நிரலை நிறைவேற்றா மல் பாதியிலேயே நின்று விடும். இடையிலேயே நிரல் நின்றுவிடாமலிருக்க இயக்க நேரப் பிழைகளை எதிர்கொள்ள அதற்கேற்ற துணைநிரலை தனியே எழுத வேண்டும். இயக்கநேரப் பிழையும் ஒரு குறுக்கீடு (Interrupt) போலவே நுண்செயலியின் கவனத்தைத் திருப்பி வேறொரு துணை நிரலை இயக்கச் செய்யும்.

exception error 12 : இயக்க நேரப் பிழை 12 : டாஸ் இயக்க முறை மையில் அடுக்கு (Stack) நிரம்பி வழிந்தால் ஏற்படும் பிழை. Config. sys கோப்பில் அடுக்குக்கு ஒதுக்கப்பட்டுள்ள நினைவக அளவை உயர்த்துவதன் மூலம் இப்பிழையைச் சரி செய்யலாம்.

exception report : விதிவிலக்கு அறிக்கை : இயல்பு கடந்த இனங்களை அல்லது குறிப்பிட்ட வீச்செல்லைக்கு அப்பாற்பட்ட இனங்களைப் பட்டியலிடுதல்.

exception reporting : விதி விலக்கு அறிக்கையளித்தல்;விதிவிலக்கு அறிவித்தல் :