பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

excess three code

550

executable


காட்சிக்கோ அல்லது அச்சிடவோ கணினிமய தரவு அதிக அளவில் திரையிடும் நுட்பம். வழக்கமான எல்லைக்கு அப்பால் உள்ளவற்றையே அறிவிக்கும். விதிவிலக்கு முறை நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

excess three code : கூடுதல் மூன்று குறியீடு : இருமைக் குறியீடு இடப்பட்ட பதின்ம எண் முறை. இதில் ஒவ்வொரு பதின்ம x இலக்கத் தையும் இருமை x உடன் 3-ஐ கூட்டும் எண்ணால் குறிப்பிடப்படும்.

exchange1 : பரிமாற்றம்.

exchange2 : இறைப்பகம்.

exchangeable disk : மாற்றிக் கொள்ளக்கூடிய வட்டு.

exchangeable disk store : மாற்றிக் கொள்ளக்கூடிய வட்டு சேமிப்பு : வட்டுகள் மூடிய வடிவில் பின் ஆதாரமாக வரும் வட்டு இருப்பகம். ஒவ்வொரு மூடியிலும் பல வட்டுகள் இருக்கும். கணினியின் இயக்கத்தின் போது வட்டு மூடிகளை தேவைப்படும்வரை கணினி மாற்றிக் கொண்டேயிருக்கும். 'டிஸ்க் பேக்"என்றும் இது அழைக்கப்படுகிறது.

exchange buffering : மாற்று தாங்கல் : உள் சேமிப்பகத்தில் தரவுகளை மாற்றும் தேவை இல்லாமல் தரவுகள் சங்கிலியாக அமைக்கும் தொழில் நுட்பம்.

exclusive : தனித்த.

exclusive or (XOR) : தனியான அல்லது (எக்ஸார்) ;விலக்கிய அல்லது; ஏதேனும் ஒன்று : உண்மைப்பட்டியலின் அடிப்படையில் இயங்கும் ஒரு பூலியன் இயக்கி. இதில் இணையும் மாறிலிகளில் ஒன்று உண்மையாக இருந்தால்தான் மதிப்பு உண்மை என்று வரும். உண்மைப்பட்டியல் இரண்டு மாறிலிகளும் உண்மையாக இருந்தால், அதன் மதிப்பு பொய்.

. exe : . இஎக்ஸ்இ : எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் ஒரு வகைக் கோப்பின் வகைப்பெயர். இயக்க நிலை நிரல் (executable programme) என்பதை குறிக்கிறது. இத்தகு நிரலை இயக்க, கோப்பின் பெயரை வகைப் பெயரின்றி உள்ளீடு செய்து நுழைவு விசையை (Enter key) அழுத்தினால் போதும்.

executable : இயக்குநிலை : ஒரு நிரல் கோப்பு இயக்கப்படும் நிலையில் இருப்பது. இத்தகைய கோப்புகள் பெரும்பாலும் . bat, . com, . exe போன்ற வகைப் பெயர்களைக் கொண்டிருக்கும்.