பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

executable file

551

executive information system


executable file:இயக்குநிலைக் கோப்பு;நிறைவேற்றக்கூடிய கோப்பு.

executable programmes:நிறைவேற்றத்தக்க செயல்முறைகள்;இயக்க நிரல்கள்.

executable statement:செயல்படுத்தக் கூடிய சொற்றொடர்;செயல்பாட்டுச் சொற்றொடர்:உடனடியாக செய்யப்பட வேண்டிய கணித செயல்பாடு களையோ அல்லது நிரல்களையோ தரும் நிரலாக்கத் தொடரின் சொற்றொடர். Assignment Statement இதற்கு ஒரு சான்று.

execute:நிறைவேற்று.

execute cycle:செயற்படுத்தும் சுழற்சி;செயற்சுற்று:குறிப்பிட்ட ஒன்றின்மீது எந்திர நிரல் புரிந்து கொள்ளப்பட்டு எந்திர நிரல் இயங்கும் நேரம்.

execution:செயற்படுத்தல்;செயற்படுத்தம்:ஒரு நிரலாக்கத் தொடரை உண்மையாகவே செயல்படுத்தும்போது,நடைபெறும் செயல்களின் சுழற்சி.

execution interface:இயக்க இடைமுகம்.

execution slot:இயக்கச் செருகுவாய்;இயக்க துளைவிளிம்பு;இயக்கப் பொருத்துமிடம்.

execution time:இயக்க நேரம்:நினைவகத்திலிருந்து ஒர் நிரலை எடுத்து அதனைக் குறி விலக்கி(decode)செயல்படுத்த நுண்செயலி எடுத்துக் கொள்ளும் நேரம். கணினியின் உள் கடிகாரத் துடிப்பின் அடிப்படையில் இது அளக்கப்படும்.

execution trace cache:இயக்கச் சுவட்டு இடைமாற்று.

execution units:நிறைவேற்று அலகுகள்.

executive:நிர்வாகி;மேலாளர்:மற்ற நிரலாக்கத் தொடர்கள் இயக்கப் படுவதைக் கண்காணிக்கும் மேலாண்மை நிரலாக்கத்யதொடர் Monitor, Supervisory system,Operation system ஆகியனவும் இதே பொருளில் குறிப்பிடப்படும்.

executive information system:செயலாண்மை தரவு முறைமை:ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்புக்கு(அதாவது உயர் நிலை மேலாளர்

களுக்கு)உதவும் தகவல் முறைமை. அவர்களுக்குத் தேவையான செய்தி கள்,விவரங்கள்,அறிக்கைகளை கணினி மூலம் உருவாக்கித் தரும் அமைப்பு. தகவலுக்கு முக்கியத்துவம் தருவதால் இது தீர்வு உதவு முறைமை(Decision Support System-DSS)-க்கு மாறு