பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

executive programme

552

expand and colapse


பட்டது. பகுப்பாயவும் தீர்வு மேற்கொள்ளவும் உதவும்.

executive programme : செயலாண்மை நிரல்;இயக்கக் கட்டளைத் தொடர்.

executive routine : செயலாட்சி வாலாயம் : ஒரு செயற்பாட்டு முறையில், மற்றச் செயல்முறைகளை நிறைவேற்றுவதைக் கட்டுப் படுத்துகிற, ஒரு முதன்மைச் செயல்முறை. இதனை மேற்பார்வையாளர் அல்லது உருவாக்க மையம் என்றும் கூறுவர்.

executive workstation : செயலாட்சிப் பணி நிலையம் : தட்டச்சு செய்ய விரும்பாத, பணி அதிகமுள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தனிவகை மேசைமோட்டுக் கணினி சார்ந்த அலகுகள். இதில் தனிவகைச் செயற்பணி விசைகள் இருக்கும். ஒரு நுண்பொறி அல்லது ஒரு தொடுதிரை மூலம் இது உட்பாட்டினை ஏற்றுக் கொள்ளும். இவை, சொல்/தரவு செய்முறைப்படுத் துதலைச் செய்யவும், தரவுத் தளங்களை நிருவகிக்கவும், வரைகலைகளை உருவாக்கவும், வேறு பல நடவடிக்கைகளுக்கு உதவவும் வல்லவை.

exerciser : செயல்படுத்தி : மனிதர்கள் மூலம் வன்பொருள் பயன்படுத்தல் மற்றும் நிரலாக்கத் தொடர்களை உருவாக்குதல், பிழைநீக்கல் ஆகிய வற்றைச் செய்ய உதவும் சாதனம்.

exit : வெளியேறு, வெளியேற்றம் : நிரலாக்கத் தொடர் அல்லது அல்கோரிதத்திலிருந்து கட்டுப்பாட்டை வேறிடத்திற்கு மாற்றும் இடம்.

expand : விரிவாக்கம் : கோப்பு மேலாண்மையில், விவரக்குறிப் பேட்டு மரத்தில் மறைவான கிளைக் குறிப்பேடுகளைக் காட்டுவதற்கு, தனியொரு விவரக் குறிப்பேட்டினையோ, ஒரு விவரக்குறிப்பேட்டு மரத்தின் ஒரு கிளையையோ அல்லது அனைத்துக் கிளைகளையுமோ ஒரே சமயத்தில் விரிவாக்கம் செய்யலாம்.

expandable : விவாக்கத்தக்க : கூடுதலான முதன்மை நினைவுப் பதிப்பி அல்லது வட்டு இயக்கிகள் மூலம் சேமிப்புத் திறம்பாட்டினை அதிகரிக்கக் கூடியவாறு ஒரு கணினியை வடிவமைத்தல்.

expandablility : விரிதிறன் : சாதனங்கள் அல்லது மாடுல்களைச் சேர்த்து கணினியின் செயல் திறனை அதிகரிக்கும் திறன்.

expand and colapse : விரிக்கவும் மூடவும்.